164 ||
அப்பாத்துரையம் - 44
ஆனால்
சிறையில் சுகதாவுடன் அமரும் வந்திருந்தான். ஆனால், இருவரும் சந்திக்கவில்லை. அமர் கடுங்கொலைக் குற்றவாளி களுடன் இருந்தான்.பாரச் செக்குகளை ஒவ்வொருவரும் இழுக்க வேண்டியிருந்தது. அமரால் முடியவில்லை. பக்கத்திலிருந்த ஒருவன் அவன் வேலையையும் நொடியில் முடித்தான். அவன் தன் வேலையையும் முடித்து, முடியாதிருந்த கைதிகளின் வேலைகளையும் முடித்தான். அவன் திறமை, அவன் தியாகம், அமரை மலைப்படைய வைத்தது. மலையினும் பெரிதாயிற்று.காலேகான் ஏழை. உழைபப்பறியாதவன், கொலை, களவே, தொழிலாகக் கொண்டவன். ஆனால் முன் அமர் அவன் திருட்டைக் கண்டித்ததும், திருடிய பொருளை வாங்கி ஆதாயமடைய மறுத்ததும் மெள்ள மெள்ள அவன் உள்ளத்தை மாற்றியிருந்தன. ஆனால், திருட்டு, கொலை ஆகியவற்றை மீண்டும் மீண்டும் செய்து தேறிய அவன், மன மாறியதை யார் நம்புவார்? அதிலும் சிறையாளரா நம்புவர்? கொலைஞருடன் பழகிய அவர்கள் உள்ளங்கள் கொலைகாரர் உள்ளங்களினும் கொடிதாயிருந்தன. காலேகான் எல்லாருக்கும் உதவி செய்தான். மாலைப்போதானதால் வழிபாட்டுக்கு அமர்ந்தான். திருடும் போதுகூட அவன் வழிபாட்டுக்கு அமர்ந்தான். திருடும்போது கூட அவன் வழிபாட்டு வகையில் நல்ல முஸ்லீமாகவே இருந்தான். சிறையாளர் வந்ததும் எவரும் வேலையில் குறை வைக்காதது கண்டு பொருமினர், யாரையாவது புடைக்க அவர்கள் கைகள் துடித்தன. “கைதிக்குக் கடவுள் வழிபாடு வேறு?" என்று சீறி அவர்கள் காலேகானை அடித்தனர். பல அடிக்கொரு தடவை அவன் ‘வாழ்க ஆண்டவன்' என்றான். ஆனால், அசையவில்லை. அடிமேலடி தொடர்ந்தது, குருதியாறு ஓடிற்று. சதைகள் சிதைந்து சிதறின. அவன் உணர்வற்று விழுந்தான். கைதிகள் கலவரம் செய்ய விரும்பினர். அமரும் குமுறி எழுந்தான். அச்சமயம் காலேகான் கண் திறந்தான். “இதுவரை அடைந்த தண்டனை மனிதர் தண்டனை. அது என் பாவம் போக்கிற்று. சிறையாளருக்கு நன்றி தெரிவித்து எனக்கு உய்தி தாருங்கள்" என்றான் அவன். அவன் கண்கள் அமரை நோக்கி மூடின. அமர் வாழ்வில் அன்று புதிய ஒளி தோன்றிற்று.ஏழையைப் படைத்த இறைவன்மீது அவன் சீற்றம் கொண்டிருந்தான்.