உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உலக இலக்கியங்கள்

அடிப்படையிலேயே தேவையில்லை.

171

தவறுடையன என்று விளக்கத்

உழைப்பவர் தாழ்ந்தவர், உழையாதவர் உயர்ந்தவர் என்ற அடிப்படையிலேயே இந்தியக் குழு வாழ்வு அமைந்துள்ளது. அறச்செயல் வகையிலும்கூட உழைப்பவர்கட்கு உதவுதல் அறம் எனக் கொள்ளப் படாமல் உழையாதவர்க்கும் உதவுதலே அறம் என்ற நச்சுக்கொள்கை இந்தியர் ஆன்மிக நெறியின் அடிப்படையா யிருந்து வருகிறது. உலகில் தனி மனிதனை வளர்க்கும் தேசியப் பண்பிலும் உலக வளர்ச்சிக்கு உதவும் மனிதப் பண்பிலும், சரிநிகர் நிலை நேர்மை பேணும் குடியாட்சிப் பண்பிலும், ஒப்பற்ற பங்குகொள்ளும் நாகரிகக்கூறு அல்லது கூறுகள் மொழியும் அதனைச் சார்ந்த இலக்கியமுமேயாகும்.

மனித நாகரிகத்தில் தேசம் என்ற பிரிவு ஏற்பட்டது அணிமைக் காலத்திலேயே. இக் காலத்தையே வரலாற்றுக் காலம் என்று கூறுகிறோம். ஆனால், வரலாற்றுக் காலம் என்ற சொற்றொடர் நம் அறியாமையை மூடிவைக்கும் ஒரு தொடர் ஆகும். இன்றைய உலக வரலாறு முழுவதும் நாகரிக உலகில் ஆரியர் நாடோடிகளாகப் பரந்து நாகரிகம் பெற்ற காலமுதலே தொடங்குகிறது. அதற்கு முற்பட்ட ஆரியச் சார்பற்ற நாகரிகங் களின் ‘வரலாற்றுக்கு முந்தி' வரலாறு இப்போதுதான் - முப்பது நாற்பது ஆண்டுகளாகத்தான் உணர்ந்து ஆராயப்பட்டு வருகிறது.

ஆரியருக்கு முற்பட்ட கால நாகரிகம் நாடு, நகர அடிப்படையில் அல்லது 'நகர்-நாடு4 அடிப்படையில் வளர்ச்சிய டைந்தது. நாகரிகம் என்ற சொல் 'நகர்' என்ற சொல்லின் அடிப்படையாகத் தோன்றியதன் காரணம் இதுவே. அந் நாளையில் ‘நகர் - நாடு' கடந்தால் அடுத்த எல்லை உலகமே. நாகரிகம் வளர்ந்தால் அடுத்தபடி வளர்ச்சி பண்பாடு அல்லது உலகப் பண்பும் மனிதப் பண்புமே. மனித அல்லது சர்வதேச அடிப்படையில் வளர்ச்சியடைந்த இப் பண்டைய நாகரிகம் பெரும்பான்மையும் அழிவுற்றபின் அதனைச் சார்ந்து இன அடிப்படையிலும், இனங்கள் தங்கிய தேச அல்லது இ அடிப்படையிலும் வளர்ச்சியுற்ற ‘புதிய தேசிய' நாகரிகங்களே ‘ஆரிய’ நாகரிகங்கள்.

L