உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




172

அப்பாத்துரையம் - 44

ஆகவே, தேசப் பிரிவுகளுக்கு முற்பட்ட பிரிவுகள் நாடு நகரப் பிரிவுகள். இரண்டிற்கும் முற்பட்டனவே இன, வகுப்பு, குடும்பப் பிரிவுகள். இன, வகுப்பு குடும்பப் பிரிவுகளும் மொழியும் மனித நாகரிகம் தோன்றுவதற்கே முற்பட்டவை. மனிதன் ‘புல்லாகிப் பூண்டாகிப் புழுவாய் விலங்குகளாய்ப் பறவைகளாய் இருந்த ஊழிகளிலேயே மொழியும் இலக்கியத்துக்கு அடிப்படையான உணர்ச்சிகளும் உயிரின வளர்ச்சியில் தோன்றி வளர்ந்தன. மொழியும் இலக்கியமும் மற்றெல்லாப் பிரிவுகளையும் மற்றெல்லா நாகரிகக் கூறுகளையும் கடந்து மனித இனத்தை வளர்ப்பதன் காரணம் இதுதான்.

இலக்கியமும் இலக்கியத்துக்கு அடிப்படையான மொழிப்

பண்பாடும் நாகரிகமும் தேசங்கடந்து, இனங் கடந்து, உலக மளாவிப் படர்ந்து வளர்பவை. ஆனால் அவை மொழி, மொழியின மாகிய 'தேசியப்' பண்பில் வேரூன்றியவை. அவ்வேரும் ஒவ்வொரு தனிமனிதன் மூளையையும் இதயத்தையும் நிலமாகக்கொண்டு அவற்றின் வளர்ச்சியையே தன் வளர்ச்சிக்கு உரமாகக் கொண்டது. அணுவினுள்ளும் அணுத் திரண்ட சிற்றெல்லை பேரெல்லை யாவற்றுள்ளும் உயிர்ப்பண்பாகிய ஒரு பேரூயிர் உள்ளும் புறமுமாய் ஊடுருவி நிற்கிறது என்பர் உயிர்நிலை (ஆன்மிக) ஆராய்ச்சியாளர். அதனை உணர வல்லாதவர்களும் உணரும் வகையில் அதே தன்மையில் நிற்பது மொழியும் அதன் உயிர்நிலை வடிவாகிய இலக்கியமுமே. அது தனிமனிதன் மூலப்பண்பாகவும் மனித வகுப்பின் குறிக்கோளாக வும் உள்ளது. மொழியுடன் வளர்கின்றது. மொழி கடந்து மொழி புகுகின்றது. ஆயினும், அருளற்றவனிடம் அருள்வராதது போல, தன்மொழிப் பண்பற்ற வனிடம் பிறமொழிப் பண்பும் சாராது. தன்மொழிப் பண்பு வளராதவனிடம் பிறமொழிப் பண்பும் வளராது.’

"

தமிழ் இன்று மொழிகளுள் ஒரு மொழியாய் இருக்கிறது. தமிழகமும் இன்று நாடுகளுள் ஒரு நாடாய் இருக்கிறது. ஆனால் இந்த ‘அந்தஸ்தைக்' கூடச் சிலபல தமிழரும், பலசிலர் பிறரும் அதற்களிக்கத் தயங்குகின்றனர். இன்றைய நிலையில் அது கடைப்பட்ட மொழியாகவும் நாடாகவும், அடிமையினத்தின்