அப்பாத்துரையம் - 44
176
செய்திகள் பல மொழி வரலாறுகளிலும் ஆங்காங்குச்
சுட்டப்பட்டுள்ளன.
உலக இலக்கிய
வரலாறுகளின் காலங்களையும் கூறுகளையும் அவ்வம்மொழி வளர்ச்சிப் படிகளாலேயே குறிக்கிறோமாயினும், ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் வகுத்துள்ள பிரிவு உண்மையில் உலக முழுவதுக்குமே சற்றேறக்குறையப் பொதுவில் பொருத்த மாயிருப்பதனால் அதனையே அடிப்படைப் பிரிவாகக் கொண்டுள்ளோம். இப் பிரிவுகள் வருமாறு;
1. வரலாற்றுக்கு முற்பட்ட அதாவது ஆரியர் வருகைக்கு முற்பட்ட காலம் அல்லது தொல்பழங்காலம் (கி.மு. 1000 வரை)
2. பண்டைக்காலம் (கி.மு.1000 முதல் கி.பி. 500 வரையுள்ள 1500 ஆண்டுக்காலம்)
ஆரியருக்கு முற்பட்ட பண்டை நடு உலக நாகரிகத்தின் அழிபாட்டில் எஞ்சிய கூறுகளைத் தம்மகங்கொடு வளர்ச்சி பெறத் தொடங்கிய புதிய பண்டைய ஆரிய நாகரிகங்களான உரோம, கிரேக்க, பாரசீக, இந்திய நாகரிகங்களும் ஆரியர் வரவால் அழிவுறாதெஞ்சியிருந்த பிற நாகரிகங்களும் வாழ்ந்த காலம் இதுவே. இக் காலத்தில் எஞ்சி நின்ற ஆரியச்சார்பற்ற நாகரிகங்கள் தென்னாட்டுத் திராவிட நாகரிகம் நீங்கலாகப் பாபிலோனிய யூத பினிஷிய நாகரிகங்கள் மட்டுமே. இக் காலத்தில் பொதுவில் ஆரியர் வரவால் தொல் பழங்கால நாகரிகத்தின் ஒளி முற்றிலும் கெடாத தனாலும், முற்கால ஆரிய
நாகரிகங்கள் அவற்றின் கூறுகளைத் தமதாக்கிக்
கொண்டதனாலும் அறிவியக்கப்பண்பு பின்பும் நின்று நிலவியதுடன் ஓரளவு வளர்ச்சியுமடைந்தது.
3.
இடைக்காலம் அல்லது இருண்ட காலம் அல்லது புராண காலம் (கி.பி. 500 முதல் 1500 வரை)
பண்டை உலக நாகரிகத்துடன் தொடர்பு கொண்டு நாகரிகமடையாமல் வடஐரோப்பாவிலும், வடஆசியாவிலும் நாகரிகமற்ற நாடோடி முரட்டு மக்களாய் இன்னும் திரிந்துவந்த ஆரியர்களின் இரண்டாம் படையெடுப்பு ஏற்பட்டு அறிவொளி மறைவுற்ற காலம் இதுவே. ஐரோப்பாவையும் தமிழகத்தையும்