உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உலக இலக்கியங்கள்

177

வெட்கித் தலைகுனிய வைக்கத் தக்க காலம் இதுவே யென்னலாம். ஆயினும், இதன் காலஎல்லை வடநாட்டில் கி.மு.2 ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கி இன்னும் முற்றிலும் முடிந்தபாடில்லை. தமிழகத்திலோ இதன் சாயல் கி.பி. 1 ஆம் நூற்றாண்டிலிருந்து காணப்படலாமாயினும் முதல் 10 ஆம் நூற்றாண்டிலேயே முழு அளவில் தமிழ்ப்பண்பை மறைத்துப் பிடிக்க முடிந்தது. கம்பர் காலமுதல் அணிமை வரை அதன் இருட்டுக் காரிருட்டாய் அறிஞர் சுந்தரம் பிள்ளை, வள்ளலார் ஆகிய விடிவெள்ளிகளால் சிறிது விடியற்காலக் கருக்கொளியாய் வருகிறது.

இக் காலத் தொடக்கத்தில் ஐரோப்பாவில் ஊணரும் காத்தியரும், விசிகாத்தியரும், டேனியருமாகிய செருமானிய ஆரிய இனத்தவரும் இந்தியாவில் ஊணர், குஷாணர், சாகர், மங்கோலியர் ஆகிய ஆரிய இனத்தவரும் படையெழுந்தனர். இவர்களுள் ஊணர்கள் எல்லா நாடுகளையும் அழித்தவர்கள். மங்கோலியர் ரஷியா, சீனா, இந்தியா, இஸ்லாமிய நாடுகளான ஈராக் (பாபிலோன்), பாரசீகம் ஆகிய நாடுகளின் வாழ்வில் தற்காலிகக் கூற்றுகளாகக் குறுக்கிட்டனர் என்பதை இவ்வெல்லா நாடுகளின் இலக்கிய வரலாறுகளில்கூட நன்கு காணலாம். ஊணரும், மங்கோலியரும் ஆரியரால்கூட வெறுக்கப்பட்டு, ஆரியர் அல்லர் என்று பலரும், ஆரியர் என்று சிலரும் கூறுகின்றனராயினும் தன்மையில் ஆரியராகிய காத்தியர், விசிகாத்தியர், செருமானியர் என்பவருடன் மாறுபட்டவரல்லர் என்பது குறிப்பிடத்தன்று நாகரிக மக்களுடன் தொடர்பு கொண்டிராத தன்மை மட்டுமே என்பதும் கவனிக்கத்தக்கது. முற்றிலும் செமானிய இனத்தவரான செருமன் மக்கள் நாகரிகமடைந்த பின் மற்ற எல்லாருடனும் ஒத்தும் உயர்வுற்றும் வளர்ச்சிபெற்றனர் என்பது காணலாம். இனப்பண்பு என்பது வளர்ச்சி காரணமான பண்பேயன்றிப் பிறப்புக் காரணமான பண்பு அன்று.

4.தற்காலம் அல்லது பகுத்தறிவு மறுமலர்ச்சிக் காலம் (கி.பி. 1500 முதல்)

நில உரிமை ஆதிக்கம்" சமய அதிக்கம்" மூடக் குருட்டு நம்பிக்கைகள், அடிமைத்தனம் முதலிய இருண்டகால நூலாம்