உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




184

அப்பாத்துரையம் - 44

லக்கியத்திலும் முதல் வல்லரசாயிருந்தது. இக் காலத்துக்கு முன் இலக்கிய உலகில் ஸ்பெயினும், அதன்பின் இத்தாலியும் முதன்மை பெற்றிருந்தன. பழைய பிரஞ்சுப் புலவர் ஸ்பானிய இலக்கியத்தையும் இத்தாலிய இலக்கியத்தையும் பின்பற்றி யிருந்தனர். ஆனால் 17 ஆம் நூற்றாண் டுக்குப்பின் பிரான்சின் செவிலித்தாய்களாகிய அவ்விரு நாடு களேயன்றி செருமனியும், இங்கிலாந்தும், ரஷ்யாவும் பிரான்சின் இலக்கியச் செங்கோலுக்குத் தலைவணங்கின. உலகின் ஒப்பற்ற முதல்தர வீறுநாடகக்5 கவிஞரான ரஸீனும், களிநாடகக் கவிஞனான மோலியரும் பாட்டியலமைந்த கதை ஆசிரியனான லாபாந்தேனும் இலக்கிய ஆராய்ச்சியானனான பொலோவும் இக் காலத்தின் நான்கு இலக்கியத் தூண்களாவர்.

நாடகக் கலைவகையில் பிரஞ்சு இலக்கியத்தின் பண்பாடு கிரேக்க இலக்கியத்தைத் தழுவியது. கிரேக்கர் உருவமைதி, வடிவழகு ஆகியவற்றிலேயே முழுக்கவனம் செலுத்தியவர்கள். அதற்கியைய நாடகத்தில் மூவகை ஒருமைப்பாடுகள் வேண்டு மென்று அவர்கள் அமைத்தனர். அவை கால ஒருமைப்பாடு, இட ஒருமைப்பாடு, நிகழ்ச்சி ஒருமைப்பாடு என்பன'. இவற்றை பிரஞ்சுப் புலவர் செவ்வனே போற்றினர். ஆனால், இங்கிலாந்தில் ஷேக்ஸ்பியரும் இந்தியாவில் காளிதாசனும் போன்றவர்கள் முதலிரு ஒருமைப்பாடுகளையும் விலக்கி நிகழ்ச்சி ஒருமைப் பாட்டை மட்டுமே கொண்டனர். பிரஞ்சுமக்கள் கவிதை, கலைஞன் அளவு கோலுக்கடங்கி அவன் சீவுளியால் உருவமைந்த கவிதை. அதனைச் செந்நெறி யல்லது கலைநெறி இலக்கியம்” என்னலாம். ஏனைய நெறி உருவினும் பொருளையும் உணர்ச்சியையும் பெரிதாகக் கொண்டு அதன் பயனாக அமைந்த இயற்கை வடிவமைப்பையே மேற்கொள்வது. இதனை உணர்ச்சிநெறி அல்லது வீறுநெறி" என்னலாம். முன்னது பூஞ்சோலை அல்லது செய்கரை அமைந்த கால்வாய் போன்றது. பின்னது வளமிக்க காட்டையும் கானாற் றையும் போன்றது.

6

பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கில இலக்கியமும் ஜெர்மன் இலக்கியமும் பிரஞ்சு இலக்கியத்தின் ஆட்சியில் நின்று அதனைப் பின்பற்றின. ஆனால், பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஷில்லர், கெதே போன்ற ஜெர்மன் கவிஞர் ஷேக்ஸ்பியரின்