உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




190

இலக்கிய மாண்பு

அப்பாத்துரையம் - 44

கிரேக்க இலக்கியத்தின் தனிப்பெரும் சிறப்பு அது பழைமை யுடன்கூட அப் பழைமையிடையே எதிர்பார்க்க முடியாத உயர்வும் நிறைவும் உடையதாயிருக்கின்றது என்பதே. அஃதாவது பழைமையில் எப்படி முதன்மையோ அப்படியே இன்றைய மொழிகளை யெல்லாம்விட அது இலக்கிய உயர்வும் விரிவும் உடையது.

தற்கால மொழிகளில் பெரும்பாலானவற்றில் பெருங் காப்பியம் குறைவு. வடமொழியில் உரைநடை இலக்கியம், வரலாறு, அறிவியல்நூல்கள் அருமை. தமிழில் இவையும் நாடகமும் மிக அருமை. கிரேக்க இலக்கியம் மிகப் புதுக்காலத் துறைகளான புதினம்' சிறுகதை, கட்டுரை முதலியவை நீங்கலாக மற்ற எல்லாத் துறைகளிலும் நிறைவுடையது. பெருங்காப்பியம், சிறுகாப்பியம், உள்ளுணர்வுப்பா? நாடகம் முதலிய பாட்டு வகைகளும், வரலாறு, மெய்ந்நிலை விளக்கம்,3 பேருரை4 அறிவியல் முதலிய உரைநடை வகைகளும் ஒருங்கே கிரேக்க இலக்கியத் திரையில் சிறப்புற மிளிர்கின்றன. இவற்றுள் ஒவ்வொரு துறையிலும் கிரேக்க மொழி இன்றும் உலகில் தனிச் சிறப்புடையதாய் இலங்குகிறது.

இவையன்றித் தமிழ்ப்புலவர் அறிந்தறிந் தின்புறும் ஒரு சிறப்பு மேனாட்டினரால் இன்றும் முழுவதும் அறிந்து நுகரப்படாத சிறப்பு கிரேக்க இலக்கியத்துக்கு உண்டு. கிரேக்கர் தமிழரைப்போல இயற்கையை நுனித்தறிந்து அதன் தன்மைகளை ஆராய்ந்து அத் தன்மைக்கேற்ப இலக்கியம் யாத்தனர். இதனால் அவர்கள் ஓவியங்களும் செதுக்குங்கலையும் கட்டடக் கலையும்

லக்கியமும் வழுவிலாச் செவ்வுவருப் பெற்றிருந்தன. மேனாட்டினர் இதனை வியந்து பாராட்டுகின்றனர்.ஆயின் இதன் காரணத்தை அவர்கள் அறிவதில்லை. தமிழர்போல் இயற்கையின் திணைநிலைகளை அவர்கள் உணர்ந்து அதன்நெறி வழாமல் நூல் எழுதினர். அதனால் முல்லை நில வாழ்வைத் தீட்டிய கவிஞன் முல்லை நிலக் கருப்பொருளுக்கும் உரிப் பொருளுக்கும் உட்பட்டே நூலியற்றினான். இதனால்தான் 'முல்லைப்பாட்டு' ஒரு தனி இலக்கிய முறையாக கிரேக்க இலக்கியத்தில் இடம் பெற்றது. தமிழர் இத் திணை நெறிகளைக்

5