உலக இலக்கியங்கள்
191
கிரேக்கரினும் விரிவாக நுணுகி ஆராய்ந்து அதன் இலக்கணத்தை ஒரு தனி அறிவியலாக்கியுள்ளார். ஆங்கில அறிஞர் இன்னும் இக் கருவூலத்தை அணுகாத நிலையில் இஃது இன்னும் தமிழ்ப் புலவர் பூசைப் பெட்டகத்தில் புதையுண்ட மந்திரச் சக்கரமாயிருந்து வருகிறது.
இலக்கிய வளர்ச்சி
கிரேக்க இலக்கிய காலம் கிட்டத்தட்ட கி.மு. 1000 முதல் கி.பி.500 வரையுள்ள 1500 ஆண்டுக் காலமாம். இதனை முப்பெரும் பகுதியாக அறிஞர் வகுத்துள்ளனர். முதற்பகுதி தொடக்கக்காலம். இது கி.மு. 475 வரையுள்ள காலம். அடுத்தது கிரேக்க நாகரிகம் தழைத்தோங்கியிருந்த கட்டிளமைக் காலமாகிய பொற்காலம். இது கி.மு. 300 வரை என்னலாம். அதன்பின் நலிவு காலமாகிய பிற் காலம்.
கிரேக்க மொழியின் முதற் பெருங் கவிஞர் ஹோமர் ஆவர். தமிழின் முதல் நூல் ஆன திருவள்ளுவர் குறள் அத் துறையில் (ஒழுக்கமுறை நூல் துறை) ஒப்புயர்வற்றிருப்பதுபோல் இவர் 'இலியடும்' பெருங் காப்பியத் துறையில் ஒப்புயர்வற்றதாய்க் கருதப்படுகிறது. தமிழில் குறள் போன்ற முழு முதல் நூல் தொடக்க நிலையிலுள்ள நூலாயிருக்க முடியாது அல்லவா? அதற்கு முன்னும் பேரிலக்கியம் இருந்திருக்க வேண்டும் என்று அறிஞர் கருதுவது இயல்பு. அதுபோல் ஹோமருக்கு முன்னும் இலக்கிய வாழ்வு இருந்திருக்க வேண்டும் என்று கருதி ஆராய்ந்து தேடிய அறிஞர் பலர் ‘பருவகாலக் கவிதைகள்' ஹோமருக்கு முந்திய காலத்தவை என்று கண்டிருக்கின்றனர். இவை முதலில் இயற்கைத் தோற்றங் களை உருவகித்துப் புனைவியல் (கற்பனைக்) கவிதைகளாகவும், பின்னர் அக் கற்பனையில் ஆழ்ந்து அமிழ்ந்து பகுத்தறிவைப் பறிகொடுத்துத் தெய்வங்கள் கதைகளாகிய புராணக் கதைகளா கவும் இயங்கின.
ஹோமர் பெயரால் இரு பெருங் காப்பியங்கள் இயங்கு கின்றன. ஒன்று இலியட் இது இலியம் என்ற பண்டைப் பெயர் கொண்ட ‘ட்ராய்' நகரில் நிகழ்ந்த பத்தாண்டு முற்றுகைப் போர் பற்றிய கதையை விரிவாக ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களில் கூறுவது. அடுத்தது ஒடிஸி என்பது. இது முதற் கதையின்