உலக இலக்கியங்கள்
193
கிட்டத்தட்ட இதே முறையில் தமிழ்நாட்டில் தோன்றியதே சாக்கையர் கூத்து என்ற பழந்தமிழ் நாடகம். இஃது இன்றும் மலையாள நாட்டில் நடைபெறுகிறது.
கிரேக்க நாடகம் வீறு நாடகம்” என்றும் களி நாடகம்1 என்றும் இருவகைகளா யியன்றது. பின்னது மக்கள் வாழ்க்கைக் குறைகளை ஏளனம் செய்து நகையின்பமும் சீர்திருத்தப்பயனும் ஒருங்கே தருவது.
வீறு நாடகத்தில், ஈஸ்கிலஸ், ஸோபாக்ளிஸ், யூரிப்பிடிஸ் ஆகிய மூவர் முதன்மையுடையவர். கிரேக்கர் சமய நம்பிக்கை யிலாழ்ந்து தன்னம்பிக்கையற்று நின்ற நிலையை ஈஸ்கிலஸ் குறிக்கிறார்.அவர் நாடகங்கள் உணர்ச்சி மிக்கவை. காண்பவருக்கு அச்சம், வியப்பு, பெருமிதம் தோற்றுவிப்பவை. ஆனால், தேவர்களே அதில் பேரிடம் பெற்றனர். அவர்கள் மாந்தரிடம் பழிக்குப்பழி வாங்குவர்; அவர் சிறுபிழைக்குப் பெருந்தண்ட மிறுப்பர். ஈஸ்கிலஸ் நாடகங்கள் பெரும்பாலும் முக்கோப்பு, நாற்கோப்பாகக் கோர்க்கப் பட்டவை. அஃதாவது சிலப்பதிகாரம் மணிமேகலை இரண்டும் ஒரே தொடர்கதை கூறுவது போல மூன்று நான்கு நாடகங்கள் ஒரே தொடர்ந்த நிகழ்ச்சியைக் கூறும்.
ஸோபாக்ளிஸ் தேவர் செயல் விடுத்து மக்கட் பண்பை விளக்குபவர்.இவர் நாடகங்கள் ஷேக்ஸ்பியர் நாடகங்களில்கூடக் காணுதற்கு அரிய கட்டமைப்பு உடையவை. மக்கட் பண்போ வியத்தில் அவருடைய அரசன் ஈடிப்பஸ், நங்கை, அந்திகோனே. வீரன் அஜாக்ஸ் ஆகியவர் சித்திரங்கள் உலக இலக்கியத்தில் அழியா இடம் பெற்றவை. ‘ஈடிப்பஸ் அரசன்’ ‘அந்திகோனே' என்பவை அவரின் சிறந்த நாடகங்கள்.
யூரிப்பிடிஸ், நாடகப் பண்பில் ஸோபாக்ளிஸுக்கு இளைத்த வராயினும் சொல்வளமும் பரந்த அறிவும் உடையவர்.
களிநாடகத்தின் ஒப்புயர்வற்ற கலைஞர் அரிஸ்தோ பானிஸ். இவர் அக்கால அரசியல் நிகழ்ச்சிகளையும் வாழ்க்கைக் கூறு களையும் எள்ளி நகையாடியவர். இவர் நூல்களில் முந்தியவற்றில் வசையின் கொடுங்கோன்மை மிகுதி. பிந்திய வற்றில் வரவர நகைச்சுவையும் நகையும் மிகுதி. நாடகங்கள் 'தவளைகள்’
ய