உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




194

அப்பாத்துரையம் - 44

‘பறவைகள்' என ஏளனப் பெயர்கள் கொண்டவை. பெருமித நாடகக் கவிஞர்களான ஈஸ்கிலஸ், ஸோபாக்ளிஸ் ஆகிய தம் தோழர்களைக் கூட இவர் நகையாடி ஏளனம் செய்தனர்.

உரைநடையில் காலத்திலும் சிறப்பிலும் வரலாறு முதுலிடம் பெற்றது. ஹெரோடோட்டஸ், துஸிடைடிஸ், ஸெனோஃபான் முதலிய மும்மணிகள் கிரேக்க வரலாற்றுக் களஞ்சியங்கள். முதல்வர் ஈஸ்கிலஸைப் போல் விதியில் நம்பிக்கை மிக்கவர். பழங்கதைப் புராணங்களை இவர் வரலாற்றுடன் குழப்பாது பிரித்தறிந்த வராயினும் அவற்றையும் கூறும் பொறுப்புணர்ச்சி உடையவர். துஸிடைடிஸ் தம் காலப் போர் முதலியவற்றைக் காரண காரியத் தொடர்புடன் கூறிய முதல் அறிஞர். ஸெனோ ஃபான் தற்கால அரசியலாளர் சர்ச்சில் போன்று தாமே படைஞராயிருந்து தாம் ஈடுபட்ட போர்களைப்பற்றி எழுதியவர்.

பேருரைகளில் மற்றை நாளில் மட்டும் அன்றி இன்றும் சிறப்புடையவராய் விளங்குபவர் டெமாஸ்தெனிஸ். உலகை வென்ற அலெக்ஸாண்டரை நாவால் கண்டித்து வெல்ல முயன்ற நாவலர் இவர்.

பேரறிஞருள் உலகுக்குத் கிரேக்க நாடு தந்த முப்பெரு மாணிக்கங்கள் சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் என்பவர் கள். இவர்களுள் காலத்தால் முந்தியவர் சாக்ரடீஸ், சாக்ரடிஸின் மாணவர் பிளேட்டோ. பிளேட்டோவின் மாணவர் அரிஸ்டாட்டில். சாக்ரடீஸ் பேரறிஞர். ஆனால், தாமே ஒன்றும் எழுதவில்லை. இறுதியில் வந்த அரிஸ்டாட்டில் தற்கால முறையில் தெள்ளத் தெளிந்த உரைநடையில் ஆராய்ச்சித் துறையும் பகுத்தறிவுப் பாதையும் வகுத்தவர். இவரே அறிவியலின் தந்தை எனப்படுபவர். அலெக்ஸாண்டரின் ஆசிரியராகும் நற்பேறு பெற்றவர். இடை யிட்ட பிளேட்டோ இலக்கிய உலகிலும் அறிஞர் உலகிலும் ஒப்பப் பெரும்புகழ் பெற்றவர். அறிவுநூல் துறையில் முதலிடம் பெற்ற குடியரசு2 என்ற அவர் நூல் இலக்கியத்தில் அதனினும் உயர்ந்த இட முடையது. உரைநடையைக் கவிதையளவு உயர் கலையாக்கியவர் அவர்.