உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உலக இலக்கியங்கள்

195

கிரேக்க நாகரிகத்தின் பிற்காலம் ரோமர் பேரரசின் பரப்பால் அரசியல் நிலையில் அழிந்தது. ஆனால், உலகை வென்ற உரோமர் கிரேக்க நாகரிகத்தின் அடிபணிந்து அதன் புகழைப் பெருக்கினர். ஆயினும் அப் புகழ்தானும் அதன் உள்ளார்ந்த உயிர்ப்பண்பைக் காக்க முடியவில்லை. கிரேக்க நாகரிக அழிவினின்றே பின்னாளைய ஐரோப்பிய நாகரிகங் களனைத்தும் பிறந்தன.

கிரேக்கர் இன்று தம் பழம் பெருமைக்குப் பெயரளவில்கூட உரியரல்லாத நிலையிலிருக்கின்றனர்.

கிரேக்க நாகரிகம், மொழி, இலக்கியம் ஆகியவற்றின் முன்னைய நிலை, இற்றைநிலை ஆகியவை பலவகையில் தமிழ கத்தை நினைப்பூட்டு பவையாகும். கிரேக்க நாகரிகம் இறந்துபட்டது. ஆனால், உலகோர் அதன் புகழுடம்பைப் போற்றினர். தமிழ் நாகரிகம் நலிந்தும் இறந்துபடவில்லை. ஆனால், உலகோர் அதன் புகழைக் கவனியாம லிருக்கின்றனர். கிரேக்க இலக்கிய வாழ்வு காலன்வாய்ப்படினும் இலக்கியம் காலன்வாய்ப்பட வில்லை. தமிழிலக்கியத்தின் பெரும்பகுதி காலன்வாய்ப்பட்டும் இலக்கிய வாழ்வு காலங் கடந்து வாழ்கிறது. கிரேக்கர் புகழையும் வடமொழிப் புகழையும்கூட உலகொப் பினும், தமிழ்ப்புகழ் தாயற்ற நிலையிலிருக்கிறது. ஆயினும் கிரேக்கர் புகழும் வட மொழிப் புகழும் அந் நாகரிகங்களைப் பிழைப்பிக்க உதவா. தமிழ் வாழ்வோ தமிழர் முயன்றால் பழம்புகழ் புதுப்பிக்கப் பெற்றுப் புதுப்புகழாகலாம்.

தமிழர் ஆராய்ச்சிக்கு எட்டாத் தமிழின் பல சிறப்புக்களை அறியக் கிரேக்க இலக்கியம் உதவக்கூடியது. தமிழை வளப்படுத்தும் முறையில் தமிழறிஞர் சிலரல்லர். பலர் அறிந்தாராய்ந்து பயில வேண்டிய ஒருமொழி கிரேக்க மொழி என்பது உறுதி.

அடிக்குறிப்புகள்

1. Novel.

2. Lyric.