உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




198

மொழியில்பு

அப்பாத்துரையம் - 44

ஜெர்மன்மொழி ஆரியமொழி இனத்தைச் சேர்ந்தது. ஜெர்மன், டச்சு, டேனிஷ், நார்விஜியன், ஆங்கிலம் ஆகிய தற்கால மொழிகளும் இறந்துபட்ட பண்டை பண்டை மொழிகளாகிய ஜஸ்லான் டிக்கும், காத்திக்கும் சேர்ந்து ஆரிய இனத்தின் பெருங்கிளை யாகிய ஜெர்மானிய உட்குழுவாகும். இதனோடொத்த மற்றப் பெருங்கிளைகள் கெல்த்தியம், இலத்தீனம், கிரேக்கம், பாரசீகம், இந்திய ஆரியம் என்பவை.

ஐரோப்பிய மொழிகளில் ஜெர்மனின் தனிச்சிறப்பு அதன் தூய தாய் மொழிப் பண்பாடேயாகும். ஜெர்மன் மொழியில் எந்தப் புதுக்கருத்தையும் பெரும்பாலும் பிறமொழிக் கலப்பில்லாமலே தூய ஜெர்மன் சொற்களாலோ, சொற்கள் அருமையாய்விட்டால் சொற்றொடர்களாலேயோ தான் குறிப்பர்.கீழ்நாட்டில் இதே இயல்பைச் சீனமொழியில் காணலாம். ஆரியமொரிகளில் பேரளவில்' தூய ஆரியமொழி என்று கொள்ளத்தக்க ஜெர்மன் மொழியின் இவ் வியல்பு தமிழில் தனித் தமிழ்ப் பண்பாடு பேணு பவர் கொள்கைக்கு நல்ல வலியுறுத்தல் ஆகும்.

ஜெர்மன்மொழி வல்லோசை மிக்கது. மேலண்ணந்தழுவும் எழுத்துக்கள் (ஷ்ஃ, க் என்பவை போன்றவை) அதில் மிகுதி வழக்கானவை. வை மொழிக்கு உறுதியும் வன்மையும் தருவதாகக் கருதப்படுகின்றன.

இலக்கியப் பரப்பு

ஜெர்மானியக் குழுவில் கிழக்கு ஜெர்மானிய மொழியாகிய பண்டைய காதிக் கி.பி. முதல் நூற்றாண்டிலேயே இலக்கிய வளம் பெற்றது மேற்கு ஜெர்மானிய மொழியாகிய ஜஸ்லாண்டிக்கில் 9 ஆம் நூற்றாண்டிலேயே வீர காவியமாகிய 'ஸாகா"க்கள் மலிந்து இலக்கிய வளம் ஏற்பட்டது பழைய ஆங்கிலம் அல்லது ஆங்கிலோ சாக்ஸனியம்கூட7 ஆம் நூற்றாண்டுக்கு முன்னிருந்தே 'பெயோவுல்ஃப்' என்ற காவியமும் 'கேட்மன்' போன்ற கவிகளும் 10 ஆம் நூற்றாண் டுக்குள் நல்ல உரைநடையும் பெற்றிருந்தன. ஆனால், ஜெர்மன் மொழி இலக்கியத் தோற்றத்தில் மிகவும் பிற்பட்டேயிருந்தது.