உலக இலக்கியங்கள்
199
லக்கியத்தில் மட்டுமன்றி, கலை, அறிவாராய்ச்சி, அறிவியல் துறை ஆகிய எல்லாத் துறைகளிலும் முதல் தோற்றம் இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி முதலியவற்றிலேயே ஏற்பட்டது. 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை ஜெர்மனி இலக்கியத்தில் இந்நாடுகளைப் பின்பற்றியே வளர்ந்து வந்தது. ஆனால், 18 ஆம் நூற்றாண்டில் தொடங்கி 18,19 ஆம் நூற்றாண்டு களில் ஜெர்மனி மற்ற நாடுகளுடனொத்து விரைவாக வளர்ந்ததுடனில்லாது, அவற்றின் வளர்ச்சிகளனைத்தையும் தன்னகத்தே கொண்டு அவற்றுக்கு வழிகாட்டியாகவும் அமைந்தது.
இலக்கிய வாழ்வில் ஜெர்மனிக்கும் மற்ற நாடுகளுக்கும் ஒரு பெரிய வேறுபாடு உண்டு. இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளை நோக்க ஜெர்மனி பெயரி நாடு அன்றாயினும், ஐரோப்பிய நாடுகள் பலவற்றையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நிலப்பரப்பு, மக்கள் தொகை, பண்பாட்டு வகை வேறுபாடுகள் ஆகிய வகைகளில் எவ்வளவோ விரிவுடையது. இவ்வளவு வேறுபாடுகளிடையே யும் இந்தியா போன்ற நாடுகளுக்கு மாறாக ஜெர்மனியில் மொழி ஒற்றுமை இருப்பது காரணமாக அதன் இலக்கியம் மிகவும் அகல முடையதாக இருக்கின்றது.
ஆங்கில இலக்கியம், பிரஞ்சு இலக்கியம் முதலிய இலக்கி யங்கள் அவ்வப்போதுதான் பிறநாட்டு இலக்கியங்களுடன் தொடர்பு கொண்டன வாயிருக்கும். அவை பெரும்பாலும் நாட்டு வாழ்வின் எல்லைக்குள் நின்று நாட்டிலக்கியம் (தேசிய இலக்கியம்) ஆகவே இருக்கும். ஆனால், ஜெர்மன் இலக்கியம் என்றும் ஐரோப்பாவின் வாழ்வு, அதன் இயக்கங்கள் ஆகியவை அனைத்துடனும் தொடர்பு கொண்டுள்ளது. எனவே, ஆங்கிலம்போல ஜெர்மன் மொழி உலக மொழியாகா விட்டாலும், ஜெர்மன் இலக்கியம் ஐரோப்பிய இலக்கியமாகவும் உலக இலக்கியமாகவும் இயங்குகிறது. ஜெர்மன் மொழி ஜெர்மனிக்கு மட்டுமன்றி ஆஸ்திரியாவுக்கும் பால்ட்டிக்நாட்டு மக்கள் பலருக்கும் பொதுத் தாய்மொழியாயிருப்பது இந் நிலைக்குப் பேருதவியாயிருக்கிறது.
ஆங்கில நாட்டில் பைரன் போன்ற ‘தனி மனிதப் பண்பு’ மிக்க கவிஞர்கட்கு இடமில்லை. நாட்டு வாழ்வு நாட்டின் இலக்கி யத்திற்கு ஓரளவு கோட்டையாய் அமைகிறது. ஜெர்மனியின்