(200) ||__
அப்பாத்துரையம் - 44
அரசியல் வாழ்வு அடிக்கடி மாறுபட்டுச் சீர்குலைவதன் பயனாய், அதன் இலக்கியம் அவ்வம் மனிதர் பண்பிற்கும் அவ்வப் பகுதிப் பண்பிற்கும் ஏற்பப் பலதிறத் தனிப்பண்புகள் உடையதாயிருக் கிறது. நாட்டு வாழ்வுக்கும் இலக்கிய வாழ்வுக்கும் நடுநாயக டங்களாகச் சில நகரங்களை மற்ற நாடுகளில் குறிப்பிடலாம். ஜர்மனியில் மாகாணந்தோறும் பல நடுநாயக இடங்கள் உண்டு.
நம் நாட்டுப் புலவர்கள் தம் நாட்டுக்கு வெளியில் கண் ணோக்குச் செலுத்துவதில்லை என்று கூறுவதுண்டு. உண்மையில் எல்லா நாட்டிலுமே இஃது ஒரளவு பொதுக்குறை என்று கூறி விடலாம். தமிழ்ப்புலவர் வடமொழிப் போக்கையும் ஆங்கிலப் போக்கையும் கவனிப்பதில்லை என்று கூறுபவர் ஆங்கிலப் புலவரும் வடமொழிப் புலவரும் தமக்கு அயலான மொழிப்போக்கைக் கவனிப்பதில்லை என்பதை எண்ணிப் பார்க்கக் காணோம். ஜெர்மன் மொழிப் புலவர்கள் மட்டிலும் இதுவகையில் விலக்கு என்னல் வேண்டும். தம் நாட்டுக்கு வெளியில் ஐரோப்பாவில் மட்டுமன்றி எவரும் கருதாத கீழ்நாடுகளிலும் அவர்கள் கண் ணோக்குச் சென்றுள்ளது. ஷேக்ஸ்பியர் ஆராய்ச்சியில் அவர் தாயக நாட்டுக்கே வழிகாட்டிய பெருமை ஸ்ெரீர்மனியினுடையது. இந்தியாவின் காளிதாசர், பாரசீகத்தின் ஹபீஸ் போன்ற கவிஞர்களை ஜெர்மன அறிஞர்களும் கவிஞர்களும் அறிந்து பாராட்டிய துடன் மொழி பெயர்க்கவும் பின்பற்றவும் செய்துள்ளனர். கிரேக்க வரலாறெழுதும் ஜெர்மன் அறிஞர் ஒருவர் கிரேக்க நகராண்மை வளர்ச்சியை விளக்கும்போது தொலைதூர மொழியாகிய தமிழில் ஒளவையார் யாத்த ஒரு வெண்பாவை (வையக மெல்லாம் கழனியா தானேற்றான் கச்சி யகம்) மேற்கோள் காட்டுவது எவ்வளவு அகன்ற நோக்கைக் காட்டுகிறது என்று கூறத் தேவையில்லை.
பழங்கால இடைக்காலங்கள்
மொழியறிஞர் ஜெர்மன் மொழியின் வளர்ச்சியில் மூன்று கூறு காண்கின்றனர். அவை பழைய ஜெர்மன், இடைக்கால ஜர்மன், புது ஜெர்மன் என்பன. ஜெர்மன் மொழி தற்கால வடிவம் பெற்றது புது ஜெர்மனியிலேயேயாயினும் வளர்ச்சி