(202
அப்பாத்துரையம் - 44
ஆயினும் நாட்டுப்புறப் பாடல் துறை இச் சமயம் செழித்து வளர்ந்தது. உரைநடையில் நகைச்சுவை மிக்க சிறு கதைத் துணுக்குகள்4 இக் காலத்தின் சிறப்பியல்பு ஆகும்.
16ஆம் நூற்றாண்டில் பழைய கிறித்தவ சமயமுறையாகிய கத்தோலிக்க நெறியையும் அதன் தலைவராகிய திருத்தந்தை5 யையும் எதிர்த்து மறுப்பு நெறி" எழுந்தது. இம் மறுப்பியக்கம்7 கண்ட முதல்வர் மார்ட்டின் லூதர். இவர் ஜெர்மன் மொழியில் அழகிய பாசுரங்கள் எழுதியதுடன் பைபிளையும் மொழி பெயர்த்தார். ஆங்கிலப் பைபிளைப் போல இதுவும் உயர் இலக்கியப் பண்பாடுடையதாயிருந்தமையால் நாட்டு வாழ்வில் வேரூன்றிய இலக்கியமாகத் திகழ்ந்தது. லூதருக்கு முன்னமேயே கடவுளை நேரிடையாக உள்ளுணர்வாலறிய முற்படும் யோகநெறி® எக்கார்ட், ஸுஸோன் டாங்கர் ஆகியவர் நூல்களில் இடம் பெற்றன. இக் காலத்தில் சமயப் பூசல்கள் காரணமாக எழுந்த சமயவாத நூல்களில் நிக்லஸ் மானுவேல் என்ற கத்தோலிக்கரின் வசைப்பாவும் அடுத்த தலைமுறையில் அவருக்கு ஈடு செய்த மறுப்பு நெறியினரான ஜோன்ஸ் பிஷர்ட்டும் சிறந்தவராவர்.
மறுமலர்ச்சியிக்கம் இத்தாலியில் 15ஆம் நூற்றாண்டி ல் மலர்ந்து பிரான்சிலும் இங்கிலாந்திலும் 16 ஆம் நூற்றாண்டில் வளர்ந்தோங்கிற்று. ஜெர்மனியை அது 17 ஆம் நூற்றாண்டு வரையில் தாக்கவில்லை. அப்போது “30 ஆண்டுப் போரால்" அது முழுப்பயனெய்தாது நின்றது. அவ் வியக்கத்தின் நடுநாயக இடமாயிலங்கியதுஹுடெல் பெர்க் நகர். ஸிங்க்ரெஃப் என்பவர் தலைமையில் தோன்றிய இவ் எழுச்சியின் பயனாக ஸ்பானியரது ‘டான் குவிக்ஸோட்' புனைக்கதையைப் பின்பற்றியும், ஆங்கில 'ரானின்ஸன் குரூஸோ' வைப் பின்பற்றியும் புனைகதைகள் எழுதப்பட்டன.
புயல்: எதிர்ப்புயல்
19
ஜெர்மன் இலக்கியம் உலக இலக்கிய வரலாற்றில் இடம் பெறத் தகுதி பெறத் தொடங்கியது புயல்-எதிர்ப்புயல் காலத்திலே தான். புயல்-எதிர்ப்புயல் என்பது ‘பழமை பெரிதா, புதுமை பெரிதா' என்பதுபற்றி அந்நாளில் பல நாடுகளிலும் எழுந்த