உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உலக இலக்கியங்கள்

19

203

போராட்டத்திற்கு ஜெர்மானியரிட்ட புனைப்பெயர் ஆகும். ஜெர்மனியில் பிறநாடுகளைப் பின்பற்றும் போலி வளர்ச்சியை முறித்துப் புதுவது புகுவதை வற்புறுத்துவது இவ் வியக்கமே. இதன் முதற்பெருங் கவிஞர் கிளாப்ஸ்டாக் என்பவர். இவர் 1715 முதல் 1769 வரை வாழ்ந்தவர். இவர் எழுதிய நூல்களுள் தேவ தூதன்” என்ற பெருங்காப்பியமும் கலிப்பா போன்ற நடையுடைய ஆட்டப் பாக்களும்2' தலைமையானவை. இவர் எழுதிய நாடகங்கள் அவ்வளவு சிறப்பு உடையவை அல்லவாயினும், பண்டைக்காலப் பண்பாட்டில் மக்கள் மனத்தைச் செலுத்த உதவின. இம் மனப் பான்மை பழம்பாவியக்கம்22 என்ற ஓரியக்கத்தைத் தோற்றுவித்தது.

புயல்-எதிர்ப்புயலாளரின் நெறிமுறைகளை வகுத்துரைத்தவர் ஜெர்மன் கருத்துரையாளர்3 ஆன எஃப் ரேய்ம் லெஸ்ஸிங் (1729- 1821) ஆவர். ஜெர்மன் இலக்கியத்துக்கு உலகு மதிப்பு இவர் காரணமாகவே முதலில் ஏற்பட்டது.

இவர் காலத்தில் பாக்கள், நாடகங்கள் ஆகியவற்றின் அமைதிகளும் இலக்கண ஒழுங்குகளும் சிறப்புடையவையா, உணர்ச்சி, மெய்ப்பாடு, உளப்பாடு (பாவம், ரசம்) ஆகியவைகள் சிறப்புடையவையா என்ற கடா (பிரச்சினை) எழுந்தது. முந்திய வற்றை உயர்வாகக் கொண்டவர் செவ்வியலாளர்4; பிந்தியவற்றை உயர்வாகக் கொண்டவர் முனைப்பியலாளர்25. லெஸ்ஸிங் செவ்வியலையே ஆதரித்தாராயினும் அது கிரேக்கரின் உள்ளுணர்வுமிக்க செவ்வியல், வெறும் இலக்கண் அமைதியிலும் பொது அறிவிலும்26 அமைந்த போலிச் செவ்வியலன்று. அமைதி தவறாத பிரஞ்சுப் போலிச் செவ்வியல் நாடகங்களைவிட, அமைதி தவறினும் உள்ளுணர்வு நிறைவுடைய ஷேக்ஸ்பியர் நாடகங்கள் உயர்வுடையவை என அவர் காட்டினார். ஷேக்ஸ்பியர் பாமுறையைப் பின்பற்றி ஐஞ்சீரடியாலாம்27 செந்தொடைப் பாக்களில்28 இவர் நாடகங்கள் எழுதினார். யூத மெய்விளக்க அறிஞரான மோஸஸ் மென்டேல்ஸோனும் 29 ‘லயக்கூன்' என்ற பாட நூலின் ஆசிரியரான விங்கிள்மனும்இவர் இலக்கிய நண்பர்கள். பாட்டோ ‘பண்குழைவுபட்ட சிலையோ' எனத் தயங்குமாறு ‘குழை பாவை'க் கலையையும்30 செய்யுளையும் மயங்க வைத்த சிறப்புடையதென'லயக்கூன்' பாராட்டப்படுகிறது.