(204
||-
அப்பாத்துரையம் - 44
ஆங்கிலப் புனைகதையாளரான ரிச்சர்ட்ஸனைப் பின்பற்றி ஸி.எம்.நீடார்டு என்பவர் 'அகதான்" என்ற ஜெர்மனியின் சிறந்த முதல் புனைகதையை இயற்றினார்.
ஜெர்மன் கவியரசர் கெதே (1789-1832)
ய
கவிஞர்களில் சிலர் காலத்தின் செல்வராகவும் வேறு சிலர் முக்காலத்துக்கும் பொதுவானவராகவும் இருப்பர். தமிழில் கம்பர் முந்திய வகையினர். வள்ளுவர் பிந்திய வகையினர். இவ்விரு வகையையும் ஒன்றுபடுத்தியவர் கெதே. அவர் இளமைக்காலப் பாடல்கள் இளங்கோ, கீட்ஸ் (ஆங்கிலக் கவிஞர்) ஆகியவர்கள் பாடலை ஒத்த உணர்ச்சி ஆழமுடையவை. ஆனால் ஷேக்ஸ்பியர், மில்ட்டன் ஆகிய இரு ஆங்கிலக் ஆழமுடையவை. ஆனால் ஷேக்ஸ்பியர், மில்ட்டன் ஆகிய இரு ஆங்கிலக் கவிஞரைப்போல் அவர் தம் வாழ்க்கைப் போக்கில் கவிதையிலும் வளர்ச்சி யடைந்தனர். அதுமட்டுமன்று. அவ்வக் காலப்போக்கையும் பளிங்குபோல் தம்மகத்தே காட்டி முக்காலக் கவிஞர் மட்டுமாயிராமல் அவ்வப் பகுதியின் தலைசிறந்த கவிஞராகவும் இருந்தார்.
இலக்கியத்தில் அவர் கைபடாத துறை இல்லை உரைநடையில் புனை கதைகள், சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள், தன்வரலாறு, செய்யுளில் சிறுபா, காவியம் நாடகம் ஆகிய எல்லாத் துறைகளிலும் அவர் பயின்று அவ்வத் துறையில் ஜெர்மன் இலக்கியத்தின் உச்சியையும் உலக இலக்கிய உயர்வையும் சென்றெட்டினார்.
அவர் இலக்கிய வாழ்வின் தொடக்கம் புயல்-எதிர்ப்புயல் காலத்தது. அதன் முழுமுதல் கவிஞராய்ப் புகழ்பெற்றபின் 19 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் எழுந்தத செவ்வியல் இயக்கத்தில்32 ஈடுபட்டு அதன் ஒப்பற்ற கவிஞரானார். பின் புதியதாய் எழுந்த ஜெர்மனியின் தலைசிறந்த இயக்கமான முனைப்பியலியக்கத் தோடொட்டி33 அதிலும் தலைமை நிலை எய்தினார்.புயல்- எதிர்ப்புயல் காலத்தின் சிறந்த இலக்கியம் 'எவர்தர்ஸ் லெய்ட்ன்' என்ற புனைகதையும் 'கிளாவிகோ' 'ஸ்டெல்லா' முதலி நாடகங்களும் ஆகும். கிளாவிகோ ஒன்றே கிரேக்கத் துன்பியல் நாடகங்களையும் ஷேக்ஸ்பியர் நடுக்காலத் துன்பியல் நாடகங்