உலக இலக்கியங்கள்
(205
களையும் போலத் துன்பியல் முடிபுடையது. இதன் பிற்பாடு எழுதப்பட்ட நாடகங்களில் துன்பியல் முடிபுகளை, ஷேக்ஸ்பியர் பிற்கால நாடகங்களை ஒப்ப, அவர் வேண்டுமென்றே மாற்றி இன்பியல் முடிபாக்கினார்.
கதே எழுதிய “சிறுபாக்கள்” கவிஞன் உணர்ச்சியை நேரிடையாகக் காட்டாமல் இயற்கையோடு ஒட்டிக்காட்டும் இயல்புடையவை. 'டீ கெஷ் விஸ்டர்' என்ற அழகிய ஓரங்கநாடக மொன்றும் நாட்டுப் பாடல்கள் பலவும் இக் காலத்தில் கெதேயால் இயற்றப்பட்டன.
இத்தாலி நாட்டின் பண்பாட்டில் ஈடுபடத் தொடங்கிய பின் எக்மாண்ட், இபிஜீனியா, டாஸோ ஆகிய மூன்று நாடகங்களும் கெதேயால் முடிக்கப்பட்டன; ஷேக்ஸ்பியரைப் போல் சில நாடகங்களுக்குச் செய்யுளைவிட உரைநடையே சிறந்ததென இவர் எண்ணியிருக்க வேண்டும். இபிஜீனியாவை மாறிமாறிச் செய்யுளிலும் உரைநடையிலும் எழுதி இறுதியில் உரைநடையிலேயே முடித்தார். டாஸோ கதைப்பகுதி குறைவாகவும் உள்ளுணர்வாராய்ச்சி மிகுதியாகவும் உள்ளது. ஐரோப்பாவின் பிற்கால உணர்வாராய்ச்சி34 நாடகங்களுக்கு இது வழிகாட்டியாயிருந்தது.
L
ல்லெம் மைஸ்டர்' என்ற புனைகதை கெதேயின் ஒப்புயர் வற்ற புனைகதையாகும். பொதுப்படக் கெதேயின் இலக்கியம் உலகுக்கே பொது இலக்கியமாயினும், இவ்வொன் ஜெர்மனிக்குத் தனி உரிமை தரும் பண்பாடுடையதாகக் கருதப்படுகிறது.செவ்வியலாளரை எதிர்த்த முனைப்பியலாளர் இதனை ஜெர்மனியின் தலைசிறந்த நூல் எனப் போற்றினர். இதன் பண்டைக்காலப் பண்பாட்டோவியம் ஆங்கிலப் புனைகதை அரசர் ஸ்காட் முதலி யோருக்கு வழிகாட்டிற்று. இதனிடையே ஷேக்ஸ்பியர் ஹாம்லெட் நாடகம் பற்றிய திறம்பட்ட கருத்துரை ஒன்றும் கெதேயால் தரப்படுகிறது.
கெதேயின் ஒப்புயர்வற்ற நாடகம் ‘ஃபாஸ்ட்' என்பது. இது உண்மையில் அவர் வாழ்நாள் தொடக்கத்துடன் தொடங்கி றுதியிலேயே முடிக்கப்பட்ட அவர் வாழ்நாள் தொகுப்பு நூலாகும். இதனை உண்மையில் அவர் மூன்று வேறு வேறு வகையில் எழுதியுள்ளார். முதல்வகை35 உணர்ச்சிக் காலத்தில்