உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




206 ||

அப்பாத்துரையம் - 44

எழுதப்பட்டது.இதனையே கவிதை வகையில் தலைசிறந்ததெனக் கருத்துரை யாளர் கருதுகின்றனர். இதன் முதற் பகுதியும் இரண்டாம் பகுதியும் பல அறிவாராய்ச்சிகளுடனும்

கட்டுரைகளுடனும் சேர்த்து எழுதப்பட்டன.

'ஹெர்மனும் டாரதியும்' ஷில்லருடன் சேர்ந்து கெதே முற்றிலும் 'செவ்வியல்’ இலக்கண அமைதியுற எழுதிய நாடகம் ஆகும். இவை தவிர இறுதி நாட்களில் கவிதைச் சுவை சொட்டும் உரைநடையில் தம் இளங்கால வாழ்வைப்பற்றித் தாமே டிஃடுங் உண்ட் வார்ஹைட்36 என்ற ‘தன்வரலாற்று நூல்' வரைந்தார். பாரசீகக் கவிஞர் ஹபீஸைத் தழுவி மரியான் வான் வில்லினர் என்ற காதற் கதையும் எழுதினர்.

கெதே எல்லாக் கவிதைத் துறையிலும் இலக்கியத் துறையிலும் வல்லவரா யிருந்ததுடன் பிறர் கொள்கையையும் கால மாறுதலையும் எளிதில் ஏற்று அவற்றைத் தமதாக்கும் ஆற்றலுடையவர். பிறநாட்டுக் கவிஞர்களைப் பாராட்டி அவர்களை ஜெர்மனிக்கு அறிமுகப்படுத்தியவர்.

அவர் கவிஞராயிருந்துகொண்டே ஒரு சிற்றரசரிடம் அமைச்ச ராயமர்ந்து நற்பெயருடன் பணியாற்றியதும், அந் நாளைய மெய்விளக்க அறிவு, அறிவியல் ஆகியவற்றில் ஈடுபட்டு அவற்றிலும் புது நூல் எழுத முனைந்தும் அவர் உள்ள விரிவுக்கு ஒரு புதுவகைச் சான்று ஆகும்.

கெதேயின் நண்பரும் அவருக்கடுத்தபடி ஜெர்மனியின் தலைசிறந்த கவிஞரும் ஷில்லர்37 ஆவர். இவர் வாழ்வில் வறுமை யுடனும் இலக்கியக் கருத்துரையாளர் எதிர்ப்புடனுட்ம போரா டியவர். கெதே ‘செவ்வியல் நெறி’ தழுவப் பெரிதும் காரணமா யிருந்தவரும் அவரே. அவர் செவ்வியல் நாடகம் ‘வாலன்ஸ்டைன்’38 ஜெர்மனிக்கும் கெதேக்கும் அவர் திறமையைக் காட்டிற்று.நட்பு முறையிலேயே கெதேயுடன் போட்டியிட்டு அவர் இயற்றிய நாடகம் மெஸ்ஸினால்3" என்பது. கெதேயைப் போலவே முனைப் பியலாளர்களுக்குச் சற்று விட்டுக்கொடுத்த நிலையில் ‘வில்லியம் டெல்' என்ற நூல் கெதே உதவியுடன் எழுதப்பட்டது.ஜெர்மன் இலக்கியத்தில் கெதேயும் ஷில்வரும் ஆங்கில இலக்கியத்தில் ஷேக்ஸ்பியரும் மில்ட்டனும் போன்ற முதல் இடம் உடையவர்.