உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உலக இலக்கியங்கள்

முனைப்பியல் இயக்கம்

(207

முனைப்பியல் இயக்கம் தொடங்குமுன் பேரிஃக்டர், ஜீன் பால், ஹோல்டரின் முதலிய கவிஞர்கள் செவ்வியல் நெறி அமைதியை மீறி வந்திருந்தனர். செவ்வியலின் திணை, காலக் கட்டுப்பாட்டை எதிர்த்து முனைப்பியல் இயக்கக் கோட்பாட்டை ஷ்லெகெல் துணைவர்” வரையறுத்தனர். 'டிக்', 'நோவாலிஸ்' என்ற புனைபெயர்கள் பூண்ட ஹார்டன்பர்க் துணைவர் இருவரும் இதன் தலைவர்கள். இவ் வியக்கம் ஹீடல்பர்க் நகரைத் தலைமையிட மாகக் கொண்டது. இவ் வியக்கத்தின் உணர்ச்சிப்பாட்டாளர் "லெர்னர்க்ளிஸ்ட், வான் அர்னிம் ஆகியவர்கள்.

முனைப்பியலாளர் கோட்பாடு 1830-க்கு மேல் தளர்ச்சி யுடைந்தது. ஐரோப்பாவெங்கும் 1830-க்கும் 1848-க்கும் இடையில் நடைபெற்ற புரட்சிகள் 'இள ஜெர்மனி' இயக்கத்தைத் தோற்று வித்தன. இதன் தலைசிறந்த கவிஞன் ஹென்ரிச் ஹீன்42. நாடோடிப் பாக்கள், கடல் வாழ்வு குறித்த பாக்கள் எழுதுவதில் இவர் ஈடும் எடுப்பும் அற்றவர்.

இள ஜெர்மன் இயக்கத்துக்குப் பின் ஜெர்மனி, இயக்க, எதிர் இயக்க அலைகளில் ஈடுபட்டே வந்திருக்கிறது. 19 ஆம் நூற்றா ண்டின் நடுவில் முனைப்பியலாளரின் உணர்ச்சிப் பாட்டு மட்டும் தொடர்ந்து எழுச்சியுடன் பாடப்பட்டது. இவ் வியக்கம் ஸ்வேபிய இய்ககம் எனப்படும். இதன் தலைசிறந்த கவிஞர் ஊலன்ட்43 ஆவர். இதே காலத்தில் 1848 புரட்சியை ஒட்டிப் புரட்சி இயக்கம் ஒன்றும் எழுந்தது. ஜெர்மனியின் மிகச்சிறந்த பெண்பாற் கவிஞரான ஆனெட் வான்ராஸ்ட் இக் காலத்தவர்.

19 ஆம் நூற்றாண்டில் ‘மணிக்கதை’44ஜெர்மனியின் தனிச் சிறப்புக்குரிய

இலக்கியமாயிற்று. கெல்லர், ஸ்டார்ம் முதலியவர்கள் கதைகள் தலைசிறந்தவை.

ஜெர்மனியின் முதன்மையான மெய்விளக்க அறிஞர் கான்ட், இவர் கெதே காலத்தவர்.ஹெஜெல், ஷேபனர் முதலியோர் இவர் பின் வந்தவர். இவர்களைப் பின்பற்றி 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இலக்கிய எழுத்தாளர் பலர் வாழ்க்கையில் வெறுப்புக் காட்டத் தொடங்கினர். ஹாக்னர்,