உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




208

அப்பாத்துரையம் - 44

நீட்ஸ் போன்றவர் மீண்டும் நாட்டில் உணர்ச்சியைத் தட்டி எழுப்பினர். இலக்கியம் வாழ்வின் வாய்மையைக் கடை பிடிக்க வேண்டும் என்ற 'மெய்ந்நிலை'க் கோட்பாடு 20 ஆம் நூற்றாண்டுக்குள் இலக்கியத்தில் முன்னிடம் பெற்றது. ரஷ்ய, வேனிஷ், இலக்கியப் போக்கு இதனை வற்புறுத்திற்று. 20 ஆம் நூற்றாண்டில் மீண்டும் முனைப்பியல் நோக்கி 'மெய்ப்பாட்டு’க் கோட்பாடு45 தலைதூக்கிற்று. இது கவிதைப் புலனுக்கு நேர் விருந்தாய்க் காட்சிப் பொருளைக் கட்புலப்படுத்த விழைந்தது. தற்போது ‘மெய்ந்நிலை' எழுத்தாளர் பக்கமே இலக்கிய வளர்ச்சி இருந்து வருகிறது.

உலக இலக்கியத்தின் தலைமை நிலை தற்போது படிப் படியாய் வடக்கு நோக்குகின்றது. ரஷ்யா, டென்மார்க், ஸ்வீடன் ஆகிய நாடுகள் ‘மெய்ந்நிலை' நாடகம் புனைகதை ஆகியவற்றில் நெடுந்தொலை சென்றுள்ளன. ஆயினும் உலகப் போர்க் குழப் பத்திற்குப்பின் ஜெர்மனி தன் தரா ஊக்கத்துக்கு மேலும் சான்று தரக்கூடும். அழிவுப்போரினின்று விலகி ஆக்கக் கலைப்போரில் அது உலகில் மீண்டும் முதலிடம் பெறும் என்று

எண்ணலாம்.

அடிக்குறிப்புகள்

1. Sagas.

2.

Volker Wanderung.

3.

Ballads.

4.

Niebiungenleid.

5.

Lyrics.

6.

Monnesong.

7.

Walther.

8.

Transition Period

9.

Renaissance Period.

10.

Storm and drang.

11. Classical Period.

12. Romantic Period

13.

Mester Gesang.

14. Sewanke.