(216) ||
அப்பாத்துரையம் - 44
புத்தமே) சீனத்தில் புகுந்தது. சீனாவில் தூய புத்தநெறியோடு ஒப்புமை உடைய கன்பூஸியஸ் கொள்கையையும் பிற்காலப் புத்த நெறியுடன் ஒப்புமையுடைய 'தாவ்' நெறியையும் சீனம் மேலீடாக ஏற்கவும் அது இயைந்தது.
6. சீன இலக்கியத் தோற்றம்
கி.மு. 3000 முதலே சீனரிடையே எண்ணும் எழுத்தும் இலக்கியமும் இருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால், கி.மு. 3000 முதல் கி.மு. 600 வரையுள்ள இலக்கியம் கன்பூஸியஸால் ஒருங்கே தொகுப்பட்டு விட்டனவாதலால் தனித்தனி அதன் பகுதிகளின் காலவரையறை அறுதியிடக் கூட வில்லை. எனவே கி.மு. 3000 முதல் கி.மு. 600 வரையுள்ள காலத்தை வரலாற்றுக்கு முந்திய காலம் என்னலாம்.
கி.மு. 600-ஐ ஒட்டி கன்பூஸியஸ், லயோட்க வாழ்ந்தனர். கி.மு. 600 முதல் கி.பி. 200 வரையுள்ள காலத்தைத் தொன்மைக் காலம் என்னலாம். கி.பி. 200 முதல் கி.பி.1200 வரையுள்ள காலமே பலவகையில் சீன இலக்கியத்தின் சிறந்த காலமாகும். இதனை இடைக்காலம் என்போம். கி.பி.1200 முதல் இன்றுவரை பிற்காலம் ஆகும்.
கன்பூஸியஸ் தம் காலத்திற்கு முன்னிருந்த இலக்கியங் களைத் தொகுத்தும் தம் கொள்கைகளை வகுத்தும் ஐந்து தொகுதிகள் வெளியிட்டார். இவை மாற்றத் தொகுதி (J-கிங்), வினைமுறைத் தொகுதி (லி-சி), வரலாற்றுத் தொகுதி (ஷு-கிங்), பழம்பாடல் தொகுதி (S-கிங்), தென்றலும் வாடையும் (சுன்-ட்சு) என்பவை. இவற்றுள் கடைசியான தென்றலும் வாடையும் மட்டுமே கன் பூஸியஸ் தாமே எழுதிய நூல்களைக் கொண்டது. மற்ற நான்கும் வரலாற்றுக்கு முந்திய காலத்தைச் சேர்ந்தவை.
முதல் இரண்டு தொகுதிகளும் கி.மு.1000-க்கு முற்பட்டவை என்று கூறப்படுகின்றது. மாற்றத்தொகுதி மூன்றடிச் செய்யுட் களாலானது. கன்பூஸியஸாலும் சீனமக்களாலும் அது மிகவும் உயர்வாகக் கொள்ளப்படினும், கன்பூஸியஸ் காலத்திலேயே அதன் பொருள் விளங்காத நிலை ஏற்பட்டிருக்க வேண்டும். அந் நூல் முழுவதும் ஏதோ ஒருவகைக் குழூஉக்குறிச் சொற்களால் அமைந்து சித்தர் நூல்கள் போலப் பொருள் தெளியப்படாத