உலக இலக்கியங்கள்
217
மந்திரங்களாக விளங்குகின்றன. ஆனால், இதன் உரையாசிரியர்கள் மனம் போனவாறெல்லாம் வாலையும் தலையையும் ஒட்டவைத்துத் தத்தம் கால அரசியல் கருத்துக் களையும் கொள்கைகளையும் அதிலிருந்து வலிய வருவித்துக் கொண்டனர். தமிழில் திருமுரு காற்றுப்படை, கந்தரனுபூதி முதலிய நூல்களை மந்திரமெனக் கொண்டு இடைக்காலச் சமய வெறியர்கள் அதன் பகுதிகளுக்குத் ‘திருடரை வெல்ல, வழக்கு வெல்ல, மாரணம் செய்ய' என்று தலைப்புக்கள் தந்த மனப்பான்மையையே இவை நினைப்பூட்டு கின்றன.
வினைமுறைத் தொகுதி ஆசாரக்கோவை போலப் பழைய பழக்க வழக்கங்களை மிக விரிவாக எடுத்துக்கூறுகின்றது. சீனத்தில் தோட்டி முதல் தொண்டைமான் வரை அனைவரும் இந் நூலில் கண்ட முறையையே தம் நடையுடை தோற்றங்களில் இம்மியும் பிசகாதுகொண்டு ஒழுகுகின்றனர். ஒரு நூல் மக்கள் வாழ்க்கையைக் கட்டுபடுத்தக்கூடும் அளவுக்கு இது ஓர் எல்லைக்கோடு என்று கூறலாம்.
வரலாற்றுத் தொகுதி கி.மு. 2240 முதல் கி.மு. 600 வரையுள்ள சீன வரலாற்றை எடுத்துரைப்பது. இது வெறும் செய்திகள் கோப்பு மட்டுமன்று; பேரரசர்கள் அவ்வக்காலங் களில் வெளியிட்ட விளம்பரங்களையும் சுற்றறிக்கை களையும் ஆணைப்பட்டியல் களையும் உள்ளடக்கியது. கன்பூஸியஸின் அரசியல்கோட்பாடுகளையும் இது ஆங்காங்கு எடுத்துரைக்கின்றது.
சீன இலக்கியத்துக்குக் கன்பூஸியஸ் செய்த அரும்பணி பழம்பாடல் தொகுதியேயாகும். கன்பூஸியஸ் காலத்தில் உலகியல் காரியவாதத்தால் சீனவாழ்வு உணர்ச்சியற்று மரத்துப்போகும் காலத்துக்கு நெடுநாள் முன்பே இயற்றப்பட்ட இப்பழம் பாடல்கள் எளிமையும் உணர்ச்சிக்கனிவும் நயமும் உடையவை. பிற்காலச் சீனர் உயர்பாடல் என்றால் அரும் பொருளும் கடுமையும் உடையதாயிருத்தல் வேண்டும் என்றெண்ணியதற்கிணங்க உரையா சிரியர்கள் மேலீடான அதன் இயற்கை. அழகைக் கவனியாமல் மாற்றத் தொகுதியைப்போல இதிலும் ஆழ்ந்த மறைமுகமான கடும்பொருளைத் தேடி வலிந்து காண்டனர். திருக்குறளின் தெள்ளத் தெளிந்த உயர்வுமிக்க முறைகளைப் பொருத்தமற்றவைகளென எண்ணிப் பரிமேலழகர்