அப்பாத்துரையம் - 44
(218) ||__ போன்ற உரையாசிரியர் வடமொழி 'சுமிருதி' நூல்களின் னிணைத்து அதற்குப் பொருள்
விதண்டாவாதத்துட
விளக்கியதனை இம்முயற்சிகளுக்கு ஒரு சார் ஒப்புமை யாகக் கூறலாம். 'தாவ்' நெறிகண்ட லயோட்க கன்பூஸியஸுக்குச் சற்று முந்தியவராய் அவருடன் சமகாலத்தில் வாழ்ந்தவராயு மிருந்திருக்க வேண்டும். ஆனால், அவர் பின் வந்தவரால் அவர் கொள்கைகளை அறிகிறோமேயன்றி அவர் எதுவும் எழுதி வைக் காததால் இலக்கியத்தில் அந் நெறி நூல்கள் அடுத்தகாலப் பகுதியுடனேயே சேர்க்கப்பட்டதாகும்.
7. தொன்மைக் காலம் (கி.மு.600-கி.பி.200)
இக்காலத்தில் முதலில் எடுத்துக்கொள்ள வேண்டிய நூல் கன்பூஸியஸ் தொகுதிகளில் ஐந்தாவதாகிய தென்றலும் வாடையும் என்பதே.கன்பூஸியஸ் காலத்திலும் அதற்கு நெடுநாட் ஆற்றல்மிக்க பல குறுநில மன்னர்கள் கையிலேயே நாட்டின் ஆட்சி சிக்கி யிருந்தது. (லு என்ற) இத்தகைய குறுநில அரசு ஒன்றில் கன்பூஸியஸ் சிலகாலம் உழவுத்துறை அமைச்சராயிருந்து அரசருடன் மாறுபட்டு நாடு கடத்தப்பட்டுப் பலவிடங்களிலும் சிரிந்தவர்.தென்றலும் வாடையும் என்ற நூலில் அவர் இவ்வரசின் வரலாற்றையும் அதனுடன் ஒட்டி அதன் வாழ்வுடன் தமக்கு ஏற்பட்ட தொடர்பு களையும் விரித்துரைக்கிறார்.நற்பண்புகளைப் போற்றுதல் தென்றலைக் குறிக்கு மெனவும் அல்லாதவற்றை ஒறுத்தல் வாடை யைக் குறிக்குமெனவும் நூலின் பெயருக்கு விளக்கம் கூறப்படுகிறது.
கன்பூஸியஸ் பின்வந்த பலர் கன்பூஸியஸின் இக் குறுநில வரலாற்றை முன்மாதிரியாகக் கொண்டு எண்ணற்ற குறுநில அரசு வரலாறுகளை எழுதிக் குவித்தனர்.
தென்றலும் வாடையும் என்ற நூலுடனேயே அவர் வழி நின்றவரான ட்சோ என்பவர் உரையும் (ட்சோ-சுவாங்) ணைக்கப் பட்டுள்ளது. நூற்செய்திகளை விளக்குவதனிடையே சுவைமிக்க வரலாற்றுச் செய்திகளை அவற்றிற்கு எடுத்துக் காட்டுகளாக அவர் கூறுகிறார். அவர் உரை நடை மிகவும் வனப்பு வாய்ந்தது. 'சீன உரைநடை யிலக்கியத்தின் தந்தை' என அவர் புகழப்படுகிறார்.