உலக இலக்கியங்கள்
கன்பூஸியஸைப்
பின்பற்றி அவர்
219
நறியை
விளக்கியவர்களுள் மிகச் சிறந்தவர் (சீனரால் மெங்-ட்சு என அழைக்கப்படும்) மென்ஷியஸ் ஆவர். இவர் கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். கன்பூஸியஸுக்கு சீனர் எடுத்த கோயில்களில் கன்பூஸியஸுக்கு அடுத்தபடி இவர் பேரிடம் பெற்றுள்ளார். இவர் எழுதிய நூல்கள் “நான்கு ஏடுகள்” ஆகும். முதல் ஏடாகிய லுன்-யூ கன்பூஸியஸின் வாழ்க்கை வரலாற்றையும் ஒழுக்கமுறையினையும் விரித்துரைக் கின்றது. அரசியலில் மக்கள் கருத்தே கடவுள் கருத்து என்ற கொள்கை இதில் இடம் பெற்றுள்ளது. அமைச்சர்கள் அரசனுக்கு அஞ்சாது நல்லன வற்றை இடித்துக் கூறுபவர்களா யிருக்க வேண்டுமென்றும் அரசனும் அத்தகைய தன்மையாளர்களைத் தேர்ந்து அத்தகைய உரிமை தந்து ஆளவேண்டுமென்றும் குறிக்கிறார். ஆனால், தீமைக்கு மாறாக நன்மையே செய் என்ற லயோட்சுவின் நெறியை இவர் ஒறுத்தார். தீமைக்கத் தக்க மாறு நன்மையாயின நன்மைக்கு மாறு யாது என அவர் வினவுகிறார். திருவள்ளுவர், இயேசு ஆகியவரின் நெறிமுறையுடன் இவ்வொரு வகையில் கன்பூஸியஸ் மாறுபடுகிறார்.
லயோட்சுவின் கொள்கைகளை இலக்கிய வாயிலாகப் பரப்பியவர்கள் லியே-ட்சு என்பவரும் ஹான்-பொய்-ட்சோ என்பவரும் ஆவர். முன்னவர் கன்பூஸியஸின் உலகியல் அறிவு நெறியை ஏளனம் செய்தார்.லயோட்சுவின் கொள்கைகள் என்று எதிப்பாளர்கள் கூறும் பல செய்திகளை முதன் முதலில் ஹான்- பெய்-ட்சோவினிடமே நாம் காண்பதால் இவர் லயோட்சுவின் நெறியை வாய்மொழி மரபால் அறிந்து எழுதியுதவியவர் என்று கூறலாம். இவர் உயர்ச்சி யாண்மையுடைய திறமைமிக்க கவிஞராதலால் இவர் மூலம் சமய முறையில் வலுப்பெறாத லயோட்சுநெறி இலக்கியத்தில் இடம்பெற இடமேற்பட்டது. ஹான் வழியின் முதற்பேரரசரின் பேரனான ஹைனான்டேவும் இத் திறத்தினர்.
கி.மு. 200 இல் புதிய சீனப் பேரரசன் ஒருவன் பழைய சீன நூல்களை யெல்லாம் அழித்தொழிக்க கச்சை கட்டினான். நூல்கள் பல எரிக்கப்பட்டன. புலவர் பலர் தூக்கிலிடப்பட்டனர். ஆயினும், பல புலவர் உயிரினும் உயர்வாகக் கண்பூஸியஸ்