உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




போதும் முதலாளித்துவம்

7

முறையின்கீழ் முதலாளியும் தொழிலாளியும் ஒத்துழைத்து உற்பத்தியை உண்டுபண்ணுவது இன்றியமையாததாகும்.

66

காள்கையளவில் தொழிலாளியும் தொழிலாற்றலை யுடை சுதந்திர மனிதனே; முதலாளியும் உற்பத்திச் சாதனங்களின் தொகுதியைப் பெற்றிருக்கும் சுதந்திர மனிதனே. இவ்விரு சாராரும் ஒருவருக்கொருவர் எதிரான இரண்டு பொருளியல் வகுப்பினர். இவ்விரு வகுப்புகளில் ஏதேனும் ஒரு வகுப்பு மற்ற வகுப்பின் ஊதியத்தைப் பயன்படுத்தினாலன்றி உற்பத்தி

1ஆனால் நடைமுறையில் நிகழ்வது என்னவென்றால் முதலாளியே தொழிலாளரின் உழைப்பைப் பயன்படுத்திக் கொள்கிறான். ஆகவே முதலாளிகள் வேலையளிப்போரென்றும் தொழிலாளிகள் வேலை செய்வோர் என்றும் கூறப்படுகின்றனர். தொழிலாளிகள் முதலாளிகளை வேலையிலமர்த்துவது முடியாததென்பது தெளிவு. ஏனெனில் தொழிலாளிகள் ஏழைகளாகவும் பெரும்பாலும் கல்வியறிவற்றவர்களாகவும் இருக்கிறார்கள்.

பேரளவில் ஒத்துழைத்துச் சங்கங்களமைத்தாலல்லாமல் தொழிலாளிகள் உற்பத்தியமைப்பை ஒழுங்குபடுத்தும் ஆற்றல் உடையவர்களாகமாட்டார்கள். அவ்வாறு ஒத்துழைத்துச் சங்கங்களமைப்பதும் எளிய காரியமன்று. ஆகவே, முதலாளி களைத் தொழிலாளிகளமர்த்துவதென்பது நடைமுறையில் எங்குமில்லாத ஒரு செய்தியாகும்.

நம் சமூக அமைப்பின் தற்போதைய முறை ‘முதலாளித்துவம்’ எனப்படும். ஆயினும் ‘பெர்னாட்ஷா' கூறுகிறபடி இதனை முதலாளித்துவம் என்று குறிப்பதை விட 'தொழிலாளித்துவம்’ என்று கூறினால் பொருத்தமாகவே இருக்கும் என்று சொல்லலாம். அவர் கூறுவதாவது: “முதலாளித்துவம் என்ற பெயர் தவறான எண்ணம் தருவதாக இருக்கிறது. நம் அமைப் பிற்கு சரியான பெயர் தொழிலாளித்துவம் என்பதாகும்!!”2

பெர்னாட்ஷா கூறுவது பொருத்தமானதே. ஏனென்றால் சமதர்மத்தைக் குறைகூற முதலாளித்துவம் என்ற பெயரைப் பலர் தவறான முறையில் பயன்படுத்துகிறார்கள். சமதர்மம் என்பது முதலாளித்துவத்துக்கு நேர் எதிரான சொல்லாகக் காள்ளப்பட்டு விடுகிறது. "சமதர்மம் என்பது முதலாளித்