உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(224) ||

அப்பாத்துரையம் - 44

போல இங்கும் நாடகம் முதலில், சமய விழாக்களை ஒட்டியே ஏற்பட்ட தாயினும் சீனசமயம் நாட்டுப்பற்றை அடிப்படையாகக் கொண்டா தாதலால் தொடக்க கால முதலே நாடகம் இங்கே வரலாற்றுத் தொடர்பு பெற்றது. நாடகங்கள் மக்கள் பேச்சு மொழியாகிய உயிருள்ள நடையிலேயே எழுதப்பட்டன வாதலால் இலக்கியப் புலவர்கள் அதனை இலக்கியமாக நெடுநாள் கருதா திருந்தனர். ஆயினும், அரசியலார் இதனை நன்கு ஆதரித்து வந்தனர். கி.பி.713ல் சீனப் பேரரசன் நடிகர்களைப் பயிற்றுவிக்கும் நோக்கத்துடன் பேரரசர் நாடகப் பயிற்சிக் குழாம் ஒன்று ஏற் படுத்தினான். இதில் பயின்றோர் 'இலந்தையஞ் சோலை இளைஞர்' என்ற பெயருடன் நாடகக்கலை வளர்ச்சியில் பெரும் பங்கு கொண்டனர்.

நெடுங்காலமாக (கி.பி. 800 வரை) நாடகத்தில் இரண்டு உறுப்பினரே நடித்தனர். பிற உறுப்பினர் ஒன்று நடியா ஊமை நடிகராயிருந்தனர்; அல்லது அவரும் 'திரைப்புறம்' பேசினர்.

8,

12

அவல நாடகம் கேலி நாடகம்' களி நாடகம்", குறைநிலைத் துன்ப நாடகம்" ஆகிய நாடகத் துறைகள் யாவும் குறைவின்றிச் சீன நாடகத்தில் இடம் பெற்றவையாயிலும் சீனர் சமயக் கொள்கை காரணமாகத் துன்பமுடிவு நாடகங்கள் மட்டும் இடம் பெற வில்லை. இவ்வகையில் வட இந்திய நாடகப் போக்குடனும், ஒருசார் ஷேக்ஸ்பியர் கடைக்கால நாடகங் களுடனும் சீன நாடகம் ஒப்புடையது.

பேச்சு, கதை நிகழ்ச்சி, பாட்டு ஆகிய யாவும் நாடக உறுப் புக்கள் எனக் கொள்ளப்பட்டதனால் அடிக்கடி அவை இடையே செருகி வளர்க்கப்பட்டன வாயினும் நாளடைவில் எல்லாம் சிதைந்தன.

சீனநாடகம் இடைக்காலத்திலேயே தொடக்கமுற்றதாயினும் பிற்காலத்திலேயே சிறப்புப்பட வளர்ச்சியடைந்தது.

10. பிற்காலம் (1200-20ஆம் நூற்றாண்டு)

ஐரோப்பாவில் துருக்கியர் படையெடுப்பின் மூலமே தற்கால நாகரிகத் தொடக்கமேற்பட்டது. சீனாவிலும் துருக்கி யருடன் தொடர்புடைய மங்கோலியர் படையெடுப்பாலேயே நாகரிக மாற்றம் ஏற்பட்டது. கி.பி. 1200 முதல் 1368 வரை