உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(226)

அப்பாத்துரையம் - 44

சீன இலக்கிய முழுமையிலும் கதைகளில் ஒழுக்கப் படிப்பினை இடம் பெற்றுள்ளது. சீனர் ஒழுக்க முறையில் ‘பெற் றோரைப் பேணல்' மீண்டும் மீண்டும் வற்புறுத்தப்படுகிறது.மிங் மரபினர் கால நாடகங்களில் இக் கருத்து முந்துறக் காணப் படுகிறது. இக் காலத்திய நாடகங்களுள் 600 நாடகங்களுக்குமேல் இன்னும் உள்ளன. அவற்றுள் தாய்ப்பற்றுப் பற்றிய பி-பா-சி ன்றும் நாடகரங்கில் பெரிதும் போற்றப்படுகிறது.நாடகங்கள் மங்கோலியர் காலத்தில் 4 அல்லது 5 அங்கங்களுடைய வையாயி ருந்தன. மிங் மரபினர் காலத்தில் அவை 30 அல்லது 40 அங்கங்களாக நீண்டன.

மஞ்சு மரபினர் காலத்தில் (17-18 நூற்றாண்டுகளில்) ‘குருதி தோய்ந்த விசிறி' 'அழியா வாழ்க்கை அரண்மனை' ஆகியவையும் ‘பலவீரர் கூட்டம்' (சுன்-யின் ஹுயி) என்ற வரலாற்று நாடகமும் பேர்போனவை. அழியா வாழ்க்கை அரண்மனை 'ரோமராணி' கதையாகிய ‘கிளியொப்பாத்ரா'வை (ஷேக்ஸ்பியர் நாடகத்தை) நினைபூட்டவல்லது. பலவீரர் கூட்டக் கதையில் நூறாயிரம் அம்பு திரட்ட உத்தரவு பெற்ற படைத் தலைவன் அதற்கு மாறாக ஆயிரம் வைக்கோற்புரிவீரன் திரட்டி அப்போலி வீரர் மீது பகைவர் எய்த அம்புகளைக் கைக்கொண்டு அவர்களை எதிர்க்க உதவிய சுவை மிக்க கதை கூறப்படுகிறது.

12. புனைகதை

சீனப் புனைகதைகள் பெரிதும் பழங்கால வரலாற்றுக் (காதல், வீரக்) கதைகளையும் எளியார்க்கன்பரான 'ஜம்புலிங்க நாடான்' போன்றவர் கதைகளையும் புலவர் துயர்களையும் பொருளாகக் கொண்டவை.

புனைகதைத் துறையில் சீனரின் நாட்டுரிமை (தேசிய) இலக்கிய மாகக் கொள்ளத்தக்க பெருமையுடையது, ‘மூவரசர் வரலாறு' என்பதே. மூன்றாம் நூற்றாண்டு வரலாற்றை ஒட்டி எழுந்த பதின்மூன்றாம் நூற்றாண்டுப் பெருங்கதை இது. வடமொழி மாபாரம்போல் இது அளவிலும் விரிவிலும் பெரிய அறிவுக் கள’சியமாகும். நூறு நாவல்களுக்குப் போதிய கதை நிகழ்ச்சிகள், கதைச் சித்திரங்கள், உறுப்பினர் தொகைகள் இதில் இடம் பெறு கின்றன. பால் ஸாக் என்ற பிரஞ்சுப் புனைகதை