உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(228

அப்பாத்துரையம் - 44

சீன

சீனக் குடியரசை அமைப்பதில் பெரும் பங்கு எடுத்துக் கொண்ட அரசியலறிஞரான லியாங்-சி-சதவோ அண்மைக்கால சீன இலக்கியத்தில் முதலிடம் பெற்றத்தக்கவர். இலக்கியத்தின் புதிய எழுத்தாளராயினும் அவ் விலக்கிய வாழ்வுக் கால முழு வதிலுமே மிகச் சிறப்புடைய தலைசிறந்த எழுத்தாளரில் அவர் ஒருவராகக் கணிக்கப்படுகிறார். தற்காலக் கருத்துக்களைக்கூடச் சீனமொழியின் தூய்மை கெடாமல் நயம்பட எழுதும் திறத்திலும் உணர்ச்சி யாற்றலிலும் இவர் ஒப்புயர்வற்றவர், இருபதாம் நூற்றாண்டின் ஐரோப்பிய அரசியலிலும் இவர் பங்கு கொண்டு முதல் உலகப்போரிறுதியில் நடைபெற்ற பாரிஸ் அமைதி மாநாட்டில் சீனாவின் பேராளராய்த் தொண்டாற்றினார். சீனக் குடியரசிலும் இவர் ஒழுங்குமுறை அமைச்சராயிருந்தவர்.

5000 ஆண்டுகட்கு மேலும் எதிர்ப்புக்கள் தாக்குதல்களுக் கிடையிலும் உயிர்ப்பாற்றல் கெடாது மீண்டும் மீண்டும் புத்தெழுச்சி பெற்றோங்கும் திராவிடத் தனிமொழியாம் தமிழைப் போல, சீன இலக்கியமும் 5000 ஆண்டு நீண்ட கால வாழ்விலும் சோர்வுறாமல் இன்னும் வளர்ந்து வருகிறது. அரசியல் கட்சிகள், வகுப்பு வேற்றுமைகள் ஆகியவைகள் ஒழிந்து நாட்டுப்பற்று, இனப்பற்று, தன்மதிப்பு ஆகியற்றைக் கைவிடாத சரிநிகர் உலக ஒற்றுமைக் கொள்கை ஏற்படு மானால், இவ் விரு நாட்டுக் கலைகளும் தம் அளவில் வளர்ச்சி யுறுவதுடன் அமையாது வன்மையில் தம்மிலும் குறைந்த மற்ற நாடுகளுக்கு வழிகாட்டியாகவும் ஊக்கம் தரும் உரமாகவும் இயங்கும் என்பது

உறுதி.

அடிக்குறிப்புகள்

1.

Heiroglphics.

3. Glider.

2.

Atom bomb.

4.

Flying Fortress.

5. Machine Gun

6.

United Kingdom.

7. Scientific Method of History

8.

Melodrama.

9.

Farce.

10. Comedy.

11.

Half Tragedies.

12.

Ral Tragedies.