உலக இலக்கியங்கள்
(231
வல்லுநர்களே ஒத்துக் கொண்டிருப்பதால் அறியலாம். தமிழின் உள்ளார்ந்த பெருமை இலக்கியத்தை மட்டும் சார்ந்ததல்ல; மொழியிலேயே இயல்பாய் அமைந்திருப்பது என்பதனால்தான் பல காலத்தில் இலக்கியம் அழிவுற்றபோதும் வேரினின்றும் புதுவளங் கொழிக்கும் மரங்கள் போல் அது புத்திலக்கியந் தோற்றுவித்திருக்கிறது என்று காணலாம்.
மொழியின் இவ்வடிப்படைத் தன்மையோடு ரஷ்யர் உள்ளத்தின் உயர்வும் ரஷ்யர் வெற்றிக்கு வித்தாயிற்று. ரஷ்யர் நாட்டுப்பற்று, குறுகிய நாட்டு வெறியும் அன்று; தன்மதிப்பற்ற அடிமைத்தனமும் அன்ற. உலகப்பற்றோடொத்த சரிநிகர் உணர்ச்சியே அவர்கள் நாட்டுப்பற்றாகிப் பழந்தமிழர்போல் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று கொண்டவர்கள் அவர்கள். ஆனால், தற்காலத் தமிழன் போலத் ‘தனக்கென ஊரில்லை. தம்மவர் மட்டும் கேளிரில்லை' என்ற அடிமை மனப்பான்மை அவர்களிடம் கிடையாது. கூடப்பிறந்த உடன் பிறப்பாளர் தம்மவர் அல்லர்; கைகோத்து நிற்கும் கயவர்கூடத் தம்மவரல்லர்; கழுத்தை நெரிக்கும் பகைவர்தாம் தமக்குரிய உறவினர் என்றும் அவர்கள் கொள்ள வில்லை. இக் காரணத்தால் உலகில் நல்லதெனக் கண்ட எப் புதுமையையும் ரஷ்யர் தயங்காது ஏற்றுத் தமதாக வளர்த்தனர். எனினும் மொழியின் தூய்மையையும் அவர்கள் இதனால் கெடுக்கவில்லை.
உள்ளார்ந்த தன்னம்பிக்கையிலும் மாறுபடவில்லை.
-
உலகிலுள்ள மொழிகளில் எல்லாம் தமிழைவிடக் கூடத் தற்பண்பையும் தூய்மையையும் சற்றும் கெடாது காத்த மொழி ரஷ்ய மொழியே எனலாம். இத்தகைய தூய்மை விரும்பத்தக்கது தானா என்பதில் தயக்கம் காட்டுபவர் பலர் பிறநாடுகளிலும் இந் நாட்டிலும்கூட உண்டு. ஆனால், இத் தூய்மையின் ஒரு நற்பலன் ரஷ்ய மொழிக்கு உலகில் ஒப்புயர்வற்ற போட்டியற்ற முதல் இடம் தந்திருக்கிறது என்பதை அவர்கள் கவனித்தால் அவர்கள் தம் கொள்கையை மாற்றுவார்கள் என்பதில் ஐயமில்லை. தமிழ் உட்படரஷ்யமொழி நீங்கலான எல்லா மொழிகளிலும் இலக்கிய நடைமொழி வேறு, பேச்சு நடைமொழி வேறு. பேச்சுநடையில் இலக்கியம், கவிதைகூட, எழுதவேண்டும் என்று பலர் அவாவுறுகின்றனர். ஆனால், மற்ற மொழிகள் அதற்கு அவ்வளவு