அப்பாத்துரையம் - 44
(232) || இடம் தரவில்லை. ரஷ்ய மொழியில் உலகில் வேறெம் மொழியிலும் இல்லாத அளவு கவிதை உரைநடை இலக்கியம் ஆகியவற்றின் மொழிநடை பேச்சுமொழி நடைக்கு அருகாமையி லிருக்கிறது. அதன் பயனாகவே டால்ஸ்டாய் முதலிய எழுத்தாளர்கள் உரைநடையிலும் புரட்சிக் கவிஞர் நடையிலும் பேச்சு நடை. அப்படியே இலக்கிய நடை யாகவும் காட்சியளிக்க முடிந்தது. தமிழில் பிறமொழியாளரின் பிறமொழி ஆட்சி ஒன்றே ரஷ்யமொழியுடன் ஒத்த இத் தன் ைமயைத் தமிழிலும் பிற இந்திய மொழிகளிலும் அழித்து வருகிற தென்னலாம்.
3. ரஷ்ய இலக்கியத்தின் தனிச்சிறப்புகள்
ரஷ்யர் கலை, இலக்கியம் ஆகியவற்றின் சிறப்புக்கள் பல. அவற்றுள் தலைமையானவை ரஷ்ய இலக்கியத்தின் வாய்மை, அகலம், நிறைவு ஆகியவையே.
அவை
உலகில் பிறநாடுகளின் கலைவாழ்வையும் வரலாற்றையும் தனித்தனி விரித்துரைத்தல் கூடும். ஏனெனில், பெரும்பாலும் தனித்தனி வளர்ச்சிகளாயிருக்கும். ஆனால்,ரஷ்யர் வரலாற்றின் வாழ்வும் கலையும் பூவும் மணமும் போல இரண்டறக் கலந்தே நிற்கும். அவர்கள் சமய உணர்வுகூட மக்கள் உள்ளத்தின் ஒரு நிலையேயன்றி வானத்திலிருந்தோ, அல்லது கண்கட்டி உலகங் களிலிருந்தோ குதித்த மாயப்பிறப்பன்று. வாழ்க்கையை வாழ்க்கையாகவும், உலகை உலகாகவும் கண்ட உலக இலக்கியங்கள், தற்காலத்தில் ரஷ்ய இலக்கியமும், முற்காலங்களில் கிரேக்க இலக்கியமும் தமிழ்ச் சங்ககால இலக்கியமும் மட்டுமேயாகும்.
‘அருள்' என்ற சொல் இன்று ஏதேல உலகியல் கடந்த நிலைமையைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது. ஆனால், அது உண்மையில் மைம்மாறு கருதாத வரம்பற்ற அன்புநிலையே யாகும். இவ்வருளே ரஷ்ய இலக்கியம் உலக இலக்கியமாய் விட்டதன் காரணமான மூலப் பண்பாகும். அரண்மனை வாழ்வும், அங்காடி வாழ்வும் இன்பமும் துன்பமும், மனிதர் இயல்பும் விலங்கு பறவை இயல்பும் விலங்கு பறவை இயல்பும் ஆகிய இயற்கையின் எல்லாத் துறைகளிலும் உள்ளதை உள்ளபடி காட்டும் பண்பு, ரஷ்ய இலக்கி யத்தில் அமைந்ததுபோல் வேறெல் விலக்கியத்திலும் அமைந்த தில்லை. இதன் காரணம்