234
அப்பாத்துரையம் - 44
இவ் விடத்தில் ரஷ்யர், அறிவியல் (விஞ்ஞான) வளர்ச்சி பற்றிக் கூறப்படும் ஒரு கூற்று, நாகரிகம், இலக்கியம் ஆகிய துறைகளுக்குப் பொருந்தும் என்பது நினைவூட்டத்தக்கது.“பிரஞ் சுக்காரன் ஒரு புதுமையைக் காண்பதில் கெட்டி; ஆங்கிலேயன் அதைத் தொழிலாக்கத்தில் பயன்படுத்துவான்; ஜெர்மன் அதை வாழ்க்கையோடொட்டவைத்து உருவமைத்து ரஷ்யனுக்கு விற்பான்; ரஷ்யன் விலைகொடுத்தும், கொடுக்காமலும் திருடியும் அதைப் பெற்றுப் புதிய உலசுமைக்கும் உலைக்கூட மாக்குவான்' என்பதே அக் கூற்று.
4. கருநிலைத் தோற்றம்
தமிழகம், இந்தியப்பரப்பு ஆகியவை பிறநாடுகளிலிருந்து மலை முதலிய இயற்கையரண்களால் பிரிந்திருப்பது போல ரஷ்யா பிரிந்திருக்க வில்லை. மனித நடமாட்டத்திற்கு இடம்தரா வட மாகடல் நீங்கலாக மற்றப் பக்கங்களில் அதன் வாயில்கள் எங்குந் திறந்த வெளிகளே. ஆதலால் ஸ்காந்தநேவியர், பின்னியர், ஸ்லா வியர், மங்கோலியர் முதலிய பல இனத்தவர் வரவு படையெ டுப்புக்கு ஆளாய் அது அண்மைவரை அல்லலுற்றது. எனினும், அதன் அகன்ற பரப்பின் காரணமாக வந்தவர் பெரும்பாலும் பிற அயலார் தொடர்பற்று நாட்டுடன் ஒன்றுபட்டனர். ரஷ்ய மொழியின் தூய்மையும் அந் நாட்டின் எல்லையற்ற பரப்பாலேயே பாதுகாக்கப்பட்டது.
18,19 ஆம் நூற்றாண்டு வரையில்கூட ரஷ்யா ஐரோப்பாவில் பகுதி என்பதைவிட ஆசியாவின் ஒரு பகுதியாகவே இருந்துவந்தது என்னலாம். ஐரோப்பிய வாழ்க்கை முறை நாகரிகமும் ரஷ்யப் பேரரசர் பீட்டர், பேரரசி இரண்டாம் காதரின் போன்றவர்களால் வலியுறுத்திப் புகுத்தப்பட்டவையே யாயினும் நாளடைவில் நிலையான பயன் தந்துவிட்டன. ஐரோப்பிய நாகரிகம் ஐரோப் பாவில் அழிந்துவிட்டாலுங்கூட ரஷ்யாவில் அழியாது நிற்கும் என்று உறுதியாகக் கூறலாம். அது மட்டுமன்று; களங்கமற்ற ரஷ்யர் உள்ளத்தில் பகுத்தறிவாகிய உலைத் தீயில் பட்டு ஆசிய ஐரோப் பியப் பண்பாடுகள் யாவுமே துகள் நீங்கிப் பத்தரை மாற்றுடன் புத்துலக நாகரிகமாகப் புதியதோர் உலகைப் படைக்க உதவும் எனப்தில் ஐயமில்லை.