உலக இலக்கியங்கள்
235
ஒழுங்கான ரஷ்ய இலக்கியம் 18 ஆம் நூற்றாண்டில் பிற மொழித் தொடர்பாலேயே ஏற்பட்டதாயினும், அதற்கு முன் கி.பி.9 ஆம் நூற்றாண்டு முதற்கொண்டு எழுதா இலக்கியமாகப் பொதுமக்களிடையே பல பழங்கதைகள் நிலவின. இவற்றுள் பல பாடல்களாகவும், உரைநடைக் கதைகளாகவும் அவ்வப்போது உருப்பெற்றன. இவற்றுட் சில ஐஸ்லாந்து, ஸ்காந்தினேவியா, பிராசு நாடுகளின் பழைய வீரப்பாடல்கள்' போன்ற 3 தொகுப்புக்கள் ஆயின. இவற்றை ரஷ்யர், 'பைலிங்' தொகுப்புக்கள் என்கின்றனர். பைலிங் தொகுப்பிற் சிறப்புமிக்கது. 'இகோரின் படைமுயற்சி”5 என்பதாகும். இது போலாவ்ட்ஸ்கி என்ற புறச்சமயத் தலைவன்மீது இகோர் என்ற உரை ஸ்காந்தினேவிய வீரன் 1180 இல் நிகழ்ந்த போரைப்பற்றிய நடைக்காவியம் ஆகும். இது பெயரளவில் கிறித்துவ சமயச் சார்பானதாயினும் உண்மையில் பண்டைய ரஷ்ய மக்கள் வாழ்வின் துடிப்பையும் இயற்கை அமைதியையும் விளக்குவ தாகும். ஞாயிற்றின் ஒளி, ஆற்றினொழுக்கு, பனி போர்த்த வடகடல், மலை முதலிய இயற்கையழ குணர்ச்சிகள் நிரம்பிய இந்நூல் உரைநடை நூலாயினும் ரஷ்யர் உணர்ச்சிப் பாடல் செல்வமாகப் போற்றப்படுகிறது. ஆயினும், கிட்டத்தட்ட ஆறு நூற்றாண்டுகள் வரை
து ரஷ்யரால் (தமிழ்ச்சங்க நூல்கள் போல்) மறக்கப்பட்டு, மறைந்த ஏடாகவே கிடந்து 1795லேயே கண்டெடுத்து அச்சிடப்பட்டது. 1812 இல் அது அரசியல் புரட்சியாளரால் எரிக்கப்பட்டதை நோக்க, அதனை அச்சிட்டுக் காத்தவர் ரஷ்யரால் பெரிதும் போற்றற்குரியவரே என்பது தெளிவு.
செத்துப் பிழைத்த இப்பழம் புதையல் நீங்கலாக, அதனைத் தொடர்ந்து 7 நூற்றாண்டுகளாக மேலை ஐரோப்பியக் கதிரொளி ரஷ்யாவுக்கு எட்டவேயில்லை என்னலாம்.
10 ஆம் நூற்றாண்டில் மாக்ஸிம் என்ற கிரேக்கத் துறவி இத்தாலி நகரமாகிய பிளாரென்ஸிலிருந்து மாஸ்கோ வந்து இத்தாலிய இலக்கியத்தின் பேரொளி விளக்கங்களை ரஷ்யாவுக்குத் தர முனைந்தார். ஆனால் ரஷ்யரின் எதிர்ப்புக்கு இரையாகி அவர் மாள வேண்டி நேர்ந்தது.