236 ||
அப்பாத்துரையம் - 44
9ஆம் நூற்றாண்டில் ஸ்காந்தினேவியத் தொடர்பால் எழுந்த இவ் விலக்கியப் பொறி 13ஆம் நூற்றாண்டில் மங்கோலியராகிய தாத்தாரியர் படையெடுப்பால் சீர்குலைந்தது. அதனுடன் இதுவரை ரஷ்யர் அரசியலிலும் கலையிலும் தலைமையிடமாயமைந்த கீவின் தலைமை நிலையும் அழிந்தது. அதன்பின் மாஸ்கோ நகரில் குழுமிய பல ரஷ்ய இளவரசர் டைவிடா முயற்சியால் 16 ஆம் நூற்றாண்டில் தாத்தாரியர் துரத்தப்பட்டு மாஸ்கோவில் புதிய ஆட்சிமுறை ஏற்பட்டும், அத் தாத்தாரியர் புகுத்திய பழமை மனப்பான்மையும் குருட்டுப் பழக்க வழக்கங்களும் நெடுநாள் அழியவில்லை. 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கிரேக்க கத்தோலிக்கச் சமயத்தவர் உறவு ஏற்பட்டு, அதனால் இன்னொரு வகையில் பழமைப் பற்றும் கட்டுப்பாடும் வளர்ந்தன. சமயச் சடங்குமுறை நூல்கள் சிலவும் செய்தித் தொகுப்புரைகளுமே இக் காலத்தின் இலக்கியமாயின.
17,18 ஆம் நூற்றாண்டுகளில் (1689 முதல் 1825 வரை ஆண்ட) பேரரசன் பீட்டர், ரஷ்யாவை ஓர் ஐரோப்பிய நாடாக்கப் பெரும் பாடுபட்டார். இவர் ஐரோப்பிய நடையுடைகள், நிலையங்கள், வழக்கங்கள் ஆகியவற்றைத் தம் அரசவை மூலமும் சட்டங்கள் மூலமும் மக்கள் மீது சுமத்தினார். மேலைநாட்டு நூல்கள் பலவற்றை மொழி பெயர்த்தார். அவர் காலமுதல் அண்மையில் ஏற்பட்ட புரட்சிக் காலம் வரை பீட்டர்ஸ்பர்க் என்ற லெனின் கிராடே ரஷ்யாவின் கலைக் கோயிலாய் விளங்கிற்று.பீட்டரின் முயற்சிகள் இலக்கியத்தில் எத்தகைய அரிய செயலும் செய்ய முடிய வில்லையாயினும் அது, சமயத் தலைவர்களின் பல்லுடைபடும் பொருள் விளங்கா இலத்தீன், கிரேக்கத் தொடர்களிலிருந்து விடுதலையளித்து எளிய மக்கள் பேச்சுமொழி நடையொன்றை ஏற்படுத்திற்று.
பீட்டருக்குப் பின் வந்த இரண்டாம் காதரின் (1762-1796) இன்னும் முற்பட ஐரோப்பிய இலக்கியத்தை ரஷ்யாவில் கொண்டுவர முயற்சி எடுத்துக்கொண்டார். வால்தேர், மாண்டிஸ்கூ,டிடரோ முதலிய அந்நாளை அறிஞருடன் அவர் கடிதப் போக்குவரவு செய்து அவர்கள் கருத்துக்களைப் பரப்ப முயன்றார். முற்போக்கான அரசியல் சீர்திருத்தக் கருத்துக் களடங்கிய அவர்களது 'நபாஸ்' என்ற அரசியல் தொகுப்பில் இவை இடம்பெற்றன. ஐரோப்பிய அரசி எழுதிய இந் நூல் மீது