(238) ||
அப்பாத்துரையம் - 44
காட்டினார். அதன் பயனாக அவற்றின் மீதுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனால் ‘மாஸ்கோ ஜர்னல்' 'ஐரோப்பிய தூதன்' என்ற பத்திரிகைகள் தழைத்தோங்கின. ஐரோப்பிய தூதனைத் தோற்றுவித்தவர் காரம்ஸீன்3. இவர் 12 ஏடுகளில் விரிவாக எழுதிய ரஷ்ய ஆட்சி வரலாறு பெயரளவில் வரலாறாய் இருந்தாலும், உண்மையில் ரஷ்யா பற்றிய ஓர் உரைநடைப் பெருங்காப்பியமாய் அமைந்தது ரஷ்யாவின் பெருமையை ரஷ்யருக்கு எடுத்துக் காட்டிய முதல்நூல் இதுவே.
காரம்ஸீைனைத் தொடர்ந்து மேலை ஐரோப்பிய இலக்கியங் களைப் பின்பற்றியும், மொழிபெயர்த்தும், தழுவியும் எழுதியவர் பலர். இவர்களிடையே பேஸில் முகாவஸ்கி4 (1789- 1852) கிரைலாவ்'5 (1769-1844). கிரிபாயெதாவ்" (1798-1829) ஆகிய மூவரும் தலைமை வாய்ந்தவர்கள்.
முகாவ்ஸ்கி உலகிலேயே ஒப்புயர்வற்ற மொழியெர்ப் பாளராகக் கொள்ளப்படுகிறார். ஆங்கிலத்தில் கிரேயின் 'இரங்கற்பா' ஜெர்மனியில் ஷில்லரின் ‘ஆர்லியன்ஸ் நங்கை’ ஆகிய மொழி பெயர்ப்பதற்கரிய உணர்ச்சிப் பாடல்களையும் கிரேக்க மொழியின் பெருங்காவியமாகிய ஒடிஸியையும் மொழிபெயர்ப்பல்ல, புத்திலக்கியம் என்னும் முறையில் இவர் மொழிபெயர்த் துள்ளார். கிரைலாவும் கதைப்பாடல்கள் எழுத முனைந்து முதலில் பிரஞ்சுக் கதைப்பாடல் மன்னர் லா பொந்தேயினுடைய கதைகளையும், பிறகு உலகப் பழங்கதையாளர் ஈஸப்பின் கதைகளையும் புத்தழகு பெற மொழிபெயர்த்தார். இதன்பின் எண்ணற்ற புதுக்கதைப் பாடல்களை இயற்றினார்.
00
>>
கிரிபாயெதாவ் "அறிவுடையார் படும் அலைக்கழிவு (கோரே உட்உமா) என்ற சமூகக் களிநாடகம்” இயற்றினார். இத்துறை இலக்கியத்தில் இது இன்றும் ஒப்பற்ற நூலாகவே இருந்து வருகிறது.
6. இலக்கிய வளர்ச்சி-புஷ்கின் ஊழி
ழுகாவ்ஸ்கியாலும் அவர் தோழர்களாலும் ரஷ்யா இலக்கிய உலகில் முதல்தர இலக்கியம் ஆயிற்று. இங்ஙனம் அன்றைய இலக்கியங்களுள் இடம் பெற்றதுமன்றி அவ்வுலகில்