உலக இலக்கியங்கள்
L
239
தனிப்புகழாட்சி செலுத்திவந்த பிரஞ்சு இலக்கியத்துடன் அதன் புகழ்த்தவிசுக்கு அது போட்டியிடவும் தொடங்கிற்று. 18 ஆம் நூற்றாண்டில் டால்ஸ் டாய், டாஸ்டோயெவ்ஸ்கி ஆகிய வர்கள் மூலமும் 20 ஆம் நூற்றாண்டில் கார்க்கி மூலமும் அது அப் போட்டியையும் தவிர்த்துக் கலையுலகில் பேரரசாட்சி நிறுவலாயிற்று. ஆயினும் இப்புகழ் அனைத்திற்கும் யிர்நிலைநாடி. புஷ்கினே எனல் வேண்டும். புலவர்கள் தத்தம் நாட்டு வாழ்வில் எட்டமுடியாக் கொடு முடிகளாக விளங்கினர். ஆயினும் அவர்கள், திருத்தக்க தேவர், ஸ்பென்ஸர், வோட்ஸ் வொர்த் முதலிய நாட்டுக் கவிஞர்கள் போல் தம்தம் கவிதையால் பிற கவிஞருக்கு உயிரூட்டுவதில் பயன் பெறவில்லை. புஷ்கின் உலகக் கவிஞரல்லராயினும் நாட்டு வாழ்வில் உலகக் கவிஞரினும் வாழ்வொளி பரப்ப உதவிய நாட்டு எழுத்தாளர் ஆவர்.
18
புஷ்கின் வாழ்க்கை மிகவும் துன்பமயமானது; குறுகியதும் கூட ஆயின், அதற்குள் அவர் ரஷ்யருக்கு உயிர்நிலை இலக்கிய ஊற்றுக்களான பற்பல நூல்களை எழுதிக்குவித்தார். அவர் இயற்றிய பெருநூல்களில் சிறந்தவை யூகென் ஆனெகன்19 போரிஸ் கோடுனாவ்20 குழுவர்21 காக்கஸஸ் சிறையாளி22 ஆகியவை. இவற்றுள் ஆனெகன் ரஷ்யாவின் முதல் புனைகதை ஆகும். இதுவும் காக்கஸஸ் சிறையாளியும் பைரன் பாடல்களின் இயல்பை ஒத்தவை. இவற்றின் கதைகள் தமிழில் 'சீவக சந்தாமணி'க் கதையையும் வடநாட்டு விக்கிரமாதித்தன் கதையையும் போன்ற வீரக்காதல் கதைத்தொடர் ஆகும். இவற்றின் கதை யுறுப்பின ரோவியமும் கருத்தோவியமும் பிற்காலக் கவிஞர் பலருக்குத் தூண்டுதலாயிருந்தன. குழுவரில் நாடோடிகளின் வாழ்க்கையின் மறைதகவின்மையும் ஆழ்ந்த மனித உணர்ச்சிகளும் நன்கு விளக்கமடைகின்றன. போரிஸ் கோடுனாவ் ஷேக்ஸ்பியரின் வரலாற்று நாடகங்களை ஒட்டியவை; அவற்றின் முதற்பொருள் காரம்ஸீன் வரலாற்றினின்று எடுக்கப்பட்டது சிறுநூல்களில் “அறிவ”னும்23 சிறுகதையில் "மீன் படவமும் மீனும்” என்ற கதையும் தலைசிறந்தவை. அவருக்குத் தனிச் சிறப்புத் தரும் துறை நாட்டுப்புறப் பாடல்களும்24 நாட்டுத் தெய்வக் கதைப் பாக்களுமே5 யாகும். போப்பும் அவர் ஆளான பல்டாவும்’, ‘இறந்த இளவரசி’26 ‘பொற் சேவல்' 'மாப்பிள்ளை’27 ஆகியவை இத்தரத்தன.