உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(240

அப்பாத்துரையம் - 44

புஷ்கின் தம் கால அறிஞரிடையே பெருமதிப்புடன் வரவேற்கப் பட்டாராயினும் ரஷ்ய நாட்டுக்கு அவர் செய்த பணியின் உண்மைப் பெருமை அவர் இறந்து நெடுநாட் பின்னரே உணரப்பட்டது. 1883இல் டால்ஸ்டாயுடன் ஒப்பான உலக எழுத்தாளரென மதிக்கப்படும் டாஸ்டா யெவஸ்கியின் தலைமை யிலேயே அவர் உருவச்சிலை திறக்கப்பட்டு அவர் நாட்டுக் கலைச் செல்வர்களின் வரிசையில் இடம் பெற்றார்.

புஷ்கினின் மாணவரும் அவர் அமைத்த இலக்கியக் கழகத்தின் உறுப்பினருமான லெர்மாண்டாவ், புஷ்கினை யடுத்து ரஷ்ய இலக்கியத்தில் தலைமைநிலை அடைந்தார். புஷ்கின் பாடல்கள் கரை நிறைந்தொழுகும் அமைந்த ஆற்றொழுக் கானால், லெர்மாண்டாவின் பாடல்கள் பாறைக்குப் பாறை குதித்தடித் தோடும் கானாறு ஆகும். புஷ்கின் ரஷ்ய இலக்கியத்தின் வாய்வியல்28 மரபினர். லெர்மாண்டாவ் அதன் புனைவியல்2” மரபினர். ஆனால், பிறநாட்டுப் புனைவியலாளர் போல் அவர் புனைவியல் உலகில் வாய்மைக்குப் புறம்பான அல்லது அப்பாற்பட்ட அல்லது மாயமருட்கையுடைய புனைவியலன்று கம்பனின் ஓங்கியடிக்கும் உயர்வு நவிற்சியோ, கீட்ஸ், டெனிசனின் மாயப் படைப்போ, கால்ரிட்ஜின் கண்கட்டு உலகோ அதில் கிடையாது. அவர் புனைவியல் திருத்தக்கதேவர் சீவக சிந்தாமணியையும், ஓரளவு இளங்கோவையும் காளிதாசனையும் நினைவூட்டும் உலகியல் மெய்ம்மையில் வேரூன்றிய புனைவியலேயாகும். புஷ்கின் மறைவுபற்றிய புகழ்ப்பாடல்30 ‘பேய்’ என்ற காவியம். இஸ்மாயில் பேய்3போயர் ஆர்ஷா32 ஸார் இவான் பாடல்33 வான் பாடல்33 ஆகிய கியவை இவர் தலைமை வாய்ந்த செய்யுள் நூல்கள்.

7. உரைநடை ஆக்கம்

34

இதே காலத்துக்குரிய பிற இலக்கிய எழுத்தாளர் 'பியெ லென்ஸ்கி, கொகால், துர்கெனெவ் ஆகியவர்கள். இவர்கள் காலமே உரைநடை இலக்கியத்தின் செழித்து வளர்ச்சிக் காலமாம். பிய லென்ஸ்கி ரஷ்யாவின் முதல் மதியுரைஞர். இவர் புஷ்கின், லெர்மாண்டால், முகாவ்ஸ்கி, கிரிபாயெதாவ் ஆகியவர்கள் இலக்கியங்களைப்பற்றிக் கூறிய மதிப்புரை நடுநிலைமையுடை யதாதலால் நிலையான மதிப்புரைக்கு