உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உலக இலக்கியங்கள்

241

வழிகாட்டியாயிற்று. புதிய எழுத்தாளரான கொகால், டாஸ்டோயெவஸ்கி ஆகியவர்களுக்கு அவர் ஆதரவளித்து வழிகாட்டியாகவும் விளங்கினார். ஆயினும், ரஷ்யக் கலையுலகின் ருபெரும் கட்சிகளுள் அதாவது பழமைப் பற்றாளர் அல்லது ஸ்லாவியப்பற்றாளர், மேலை நாட்டிலே பற்றாளர்35 ஆகியவர்களுள் இவர் பொதுவாகப் பழைமைப் பற்றாளரை எதிர்த்து மேலையியலாருக்கு முழு ஆதரவும் தந்தார்.

கொகால் தென் ரஷ்யாவிற் பிறந்தவர். இலக்கிய மொழி யாகிய பெரிய ரஷ்ய மொழியினின்றும் சற்று வேறுபட்ட சிறிய ரஷ்ய மொழியாகிய தம் தாய் மொழியிலேயே இவரால் தொடக்கக் கால நூல்கள் எழுதப்பட்டன. இவர் சிறந்த உரைநடை எழுத்தாளர். ஆனால் இரண்டுவகைகளில் இவர் நூல்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு நிற்கின்றன. ஒன்று இவர் நூலில் தீட்டப்படும் கருத்துக்கள் முற்றிலும் ரஷ்யப்பண்பும் ரஷ்யமரபும் நிறைவுற்றவை. க் காரணத்தாலேயே புஷ்கினைப்போல இவரும் பிற நாடுகளில் மிகுந்த புகழ்பெற முடியாத உள்நாட்டுப் புலவராய் விளங்கினார். இவரது இன்னொரு பண்பு உலகியல் கடந்து இயற்கைக்கு அப்பாற் பட்ட சிறு தெய்வ, பேய்உலகச் செய்திகளுக்கு இவர் முதலிடம் கொடுத்ததேயாகும். இதனால் இவற்றில் இவர் நம்பிக்கையை வளர்த்தார் என்று. கொள்ளக்கூடாது. இத்தகைய உளநிலைகளைக் கலையோவியத்துக்குப் பயன்படுத்தினார் என்று மட்டுமே கொள்ள லாகும். இவர் தலைசிறந்த காவியம் பேய்36 என்பதே. ஆனால், இக் கலையுலகப் பேய் மனித உணர்ச்சியுடையது. ஒரு பெண்ணைக் காதலித்துக் கனிவும் மனிதபாசமும் கொண்டு அச்சிக்கலால் அப்பெண்ணையும் பேயாகக் கூட்டிச்சென்றதை 'டிச் சென்றதை இது கூறுகிறது. 'சோராச்சினெட்ஸ் விழா’, ‘தாராஸ் பலபா' 'வீய்' 'கவினோ வியங்கள்' முதலிய பல சிறுகதைகளும் இவர் கலைப்படைப்பில் சேர்ந்தவை.

நாடகத்துறையில் கொகாலின் 'மேற்பார்வையாளர் தலைவர்’37 கிரிபாயெதாவின் 'கோரே உட்உமா'வுக்கு அடுத்த படியான சிறந்த களிநாடகம். ‘இறந்த ஆவிகள்’38 இவர் ஒப்பற்ற இலக்கியப் படைப்பு. இதன் கதைத் தலைவன் ஷேக்ஸ்பியரின் பால்ஸ்டாப்புக்கு ஒப்பான இறவாகக் கலைச் சித்திமாகக் கருதப்படும் தலைவன் ஆகும்.