உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




242

அப்பாத்துரையம் - 44

துர்கெனிவின்” வாழ்க்கையை ரஷ்ய இலக்கியப் போக்கின் ஒரு திரும்புமுகம் என்னலாம் உரைநடையில் எளிமைய்ைக காண்டு வந்தவர் காரம்ஸின். உரைநடை இலக்கியத்துக்கு அரிய கட்டுக்கோப்பமைத்து அதற்குக் காவியத்துக்குரிய அமைப்பைத் தந்தவர் துர்கெனிவ் துர்கெனிவ் அருமுயற்சியால் கண்ட இப் பண்பாட்டைத் தம் இயற்பணியாக்கி, எளிமைத்திறம் தோன்ற வைத்து, உலகில் ஒப்புயர்வற்ற உரைநடை இலக்கியம் அமைத்தவர் டால்ஸ்டாப் எனவே, டால்ஸ்டாயின் கலைப் பேரரசுக்குத் துர்கெனிவ் முன்முகப்பாய் அமைந்தவர் என்று கூறுவது தவறாகாது.

துர்கெனியின் முதல் நூலாகிய கேளிக்கையாளர் ஓவியங்கள்” என்பதே அவரை எடுத்த அடியில் புகழின் உச்சிக்குக் கொண்டு போயிற்று. இது வெறுங்கலை இலக்கிய மட்டுமன்று; சீர்திருந்தத இலக்கியமுங்கூட அமெரிக்காவிலும் ஐரோப்பா விலும் ஒழிக்கப்பட்ட அடிமைமுறை ரஷ்யாவில் 19 ஆம் நூற்றாண்டிலும் நீங்காதிருந்தது. அமெரிக்காவில் ‘டாம் மாமன் உள்ளறை4 அம் முறையை ஒழிக்கக் கருவியாயிருந்தது போல், ‘கேளிக்கையாளன் ஒவியங்’களும் இரண்டாம் அலெக்ஸாண்டர் அம் முறையை ஒழித்துச் சட்டமியற்றப் பெருந்தூண்டுத லாயிருந்தது. ஆனால், சீர்திருத்த நோக்கங் கொண்ட இதுபோன்ற நூல் ‘டாம் மாமன் உள்ளறை' போன்ற பிறநாட்டுச் சீர்திருந்த இலக்கியம் போலல்லாமல் உயர்ந்த கலைப் படைப்பாகவும் அமைந்தது ரஷ்யாவின் கலைப் புதிர்களுள் ஒன்று, பொன்மலர் மணமும் பெற்றிருப்பதை யாரே விரும்பார்?

இம் முதற் படைப்பால் பெற்ற புகழைத் 'தந்தையரும் மகாரும்' என்ற அடுத்த நூல் கெடுத்து அவரை நாட்டை விட்டு ஓட்டிற்று. காரணம் கலைக் குறைபாடன்று. அது அரசியலை எதிர்த்தது என்பதனாலேயே. ஆனால், அரசியலார் எதிர்த்த போதும் நாட்டு மக்கள் அதனைப் போற்றாதிருக்கவில்லை. வெறுத்தவரும் மறைவில் வாங்கி வாசிக்க விரும்புமளவு அது கலைச்சுவை அமைந்திருந்தது. 'உரைநடைக் கவிதைகள்' என்ற அடுத்த நூல் அதன் பெயர் காட்டுகிறபடியே உரைநடையில் கவிதையின் சிறப்பைத் தருவதாகும். 'பெழின் சமவெளி'4 ‘பாடகர்’ ‘சாவு' உயர்குடி மக்கள் குரம்பை43 ஆகிய அவர் நூல்கள் யாவுமே உரைநடைக் கவிதைகளாம். உரைநடையில்

42