உலக இலக்கியங்கள்
243
இவர் கவிதை உயர்வுக்கு இளவேனில் நீர்நிலைகளும்44 அமைப்பாதண்மைத் திறனுக்கத் 'தந்தையும் மகாரும்' எடுத்துக்காட்டுகள் ஆகும். பிந்தியது உலக இலக்கியத்தில் கிரேக்க நாடக ஆசிரியன் ஸோ போக்ளிஸ் நாடகத்துடனும் டால்ஸ்டாயின் மெய்ம்மை விளக்கத் துடனும் 45 மட்டுமே ஒப்பிடத்தக்க கலைச்சித்திரம் எனக் கொள்ளப் படுகிறது.
46.
ரஷ்ய நாட்டு வாழ்வொழுக்கில் கலந்துகொள்ளாமல் அந் நாளைய இயக்கங்கள் யாவற்றையுமே நடுநிலையில் நின்று கண்டித்த சிலவகை இலக்கிய எழுத்தாளர் துர்கெனிவ் ஊழியில் இருந்தனர். டால்ஸ்டாயின் இலக்கிய அமைப்பாண்மைக்குத் துர்கெனிவ் வழிகாட்டியாயிருந்தது போல் அபர் அறத்துறைக் கோட்பாட்டுக்கு இவர்கள் வழிகாட்டியாயினர். இத்துறை யினருள் சிறப்பு வாய்ந்தவர் மைக்கேல் ஸால்டிகாவ்" கிரைலாவ், கொகால், கிரிபோயெடாவ் ஆகிவர்களின் உயர்வுமிக்க நகைச்சுவை இவரிடம் வன்மை வாய்ந்த வாள்வீச்சை ஒத்த வசைத் துறையாயிற்று. 'கோட்டங்களின் வாழ்வுச் சித்திரங்கள்4 சிறையாளிகள் முதலியவர்கள் வாழ்வினை அவர்கள் வாய்மொழி யாலேயே விளங்க வைக்கிறது. நகர மூலங்களிலிருந்தே எழுதப்பெற்ற ஒரு நகர வரலாறு என்பது ஸ்விப்டின் கல்லிவரின் பயணங்கள்8 போன்ற அரசியல் வசை நூல். சிறுவர் புதுமைக் கல்லிவரின் பயணங்கள் போன்ற அரசியல் வசை நூல். சிறுவர் புதுமைக் கவிதை வடிவில் ரஷ்யாவின் அரசியல் வாழ்க்கை வரலாற்றின் சிறுமைகளை இஃது எடுத்துக்காட்டுவது குளுபாவ் அல்லது மூடர் நகராட்சி போப்பின் ‘மூடஅரசு5° போன்றது. மூடர் நகரத்தாற் தமக்கேற்ற முழுமூடனைத் தேடி அரசாளச் செய்த முயற்சி. மூட அரசு என்ற பெயரில் வசையாக்கப்பட்ட நாடு
ரஷ்யாவேயாகும். 'பாம்பாதுரி51 என்ற நூலில் உயர்பணியாளரின் ஊழல்கள் எடுத்துக்காட்டப்படுகின்றன. சால்டிகோவ் துறையில் அவருடனொத்த மற்றோர் எழுத்தாளர் லெஸ் காவ். இவர் பழமைப் பற்றாளரை மட்டுமன்றிப் புதுமைப் பற்றாளரின் போலித் தனத்தையும் வெளிப்படுத்தியவர்.
8. ரஷ்யாவின் பொற்காலம்
ரஷ்ய இலக்கியமாகிய மாளிகையின் தலைவாயில் கோபுரம் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்குரிய அதன்