(250)
||
அப்பாத்துரையம் - 44
கடற்காக்கை' (‘சைகா'), வன்யாமாமன்74 மூன்று உடன்பிறந்த நங்கையர்75 இலந்தைத் தோட்டம்“ என்பவை இவரின் சிறந்த நாடகங்கள். அரசவை மன்றத்தான்” அஞ்சல்£ இளவரசி7 கட்சி80 குதிரைக் களவாணிகள் தூங்குகுமூஞ்சி82 ஆகிய புனைகதைகள் சிறுகதைகளும் இவர் பலவகைச் சிறப்பைக் காட்டுபவை.
L
-81
செக்காவைத் தொடர்ந்து புனைகதையில் புத்தெழுச்சி உண்டு பண்ணியவர்கள் மாக்ஸிம் கார்கி, ஆண்ட்ரீவ் ஆகியவர்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தலைசிறந்த கலைஞர் டால்ஸ்டாய். ஆனால், 20 ஆம் நூற்றாண்டில் அதே இடம்பெறத் தக்கவர் கார்கியேயாவார். இவர் முழுப்பெயர் அலெக்ஸி மாக்ஸிமோவிச் பெஷ்காவ் என்பது. இவர் 1869 இல் பிறந்தவர். வாழ்க்கையில் இவர் டாஸ்டோயெவ்ஸ்கிபோல் பல இன்னல்களை அடைந்தவர். ரஷ்யப் பொதுவுடைமை இயக்கத்திலும் பெரும் பங்கு கொண்டு அதன் முழுவெற்றி ஏற்படும்பரை பல தடவை தாய்நாடு விட்டோடியும் ஒறுக்கப்பட்டும் வந்தவர். ஆயினும், அவர் கலை, புரட்சி க்காரர் மட்டுமன்றிப் பிறரும் பாராட்டுவதாகவே இருந்தது.
இவர் இளமைக்கால வாழ்க்கையின் இன்னல்கள் ‘இருபத் தாறு மனிதரும் ஒரு சிறுமியும்' என்ற நூலில் அழியாச் சித்திரமாகத் தரப்பட்டுள்ளன. 1898 இல் 1898 இல் இவர் முதல் கதைத்தொகுதி இரண்டு ஏடுகளாக வெளிடப்பட்டுக் கலையுலகில் அவருக்கு பெரும் புகழை உண்டு பண்ணியது. மார்க்ஸின் கொள்கைகளுக்காகப் போராடிய ழிஸ்ன்83 பத்திரிகையில் போமாகாடீவ், அம்மூவர்84 ஆகிய நூல்கள் வெளிவந்தன. 'நா தே’85 அல்லது ஆழத்தின் ஆழம்' என்ற அவரின் புகழ்மிக்க நாடகம் ஜெர்மனியில் அவர் பெயரை நிலைநாட்டிற்று. பெர்லினில் நூல் வெளிவந்தவுடனேயே அது 500 இரவுகள் தொடர்ந்து ஆடப்பட்டதாம். 'புயல் தூதன் பாடல்' அவர் கவிதை யாற்றலும் உடையவர் என்பதற்குச் சான்று.
டால்ஸ்டாயின் புதுமை போர்த்த பழமை, டாஸ்டோ யெவ்ஸ்கியின் பழமை போர்த்த புதுமை ஆகிய இரண்டையும் நாடுபவர்கட்கு இளநகர்ச் செல்வர்86 (சிறு பூர்ஷ்வாக்கள்) என்ற பெயர் இட்டவர் இவரே. 1919இல் 'டால்ஸ்டாப் பற்றிய நினைவூட்டுகள்' என்ற நூலில் அவர் டால்ஸ்டாயின் கோட்பாடு