உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6. உருது இலக்கியம்

1. உருது மொழியின் தோற்றம்

உருதுமொழி இன்று இந்தியாவின் பெரும் பகுதியிலுள்ள முஸ்லீம்களால் தங்கள் நாகரிகத்தின் சின்னமான நாட்டுமொழி என்று கருதப்படுகிறது. உருது இலக்கியமும் இந்திய முஸ்லீம் புலவர்களின் முயற்சியால் வெளிநாட்டு முஸ்லீம் இலக்கியம் மொழியாகிய பாரசீகத்தின் முன்மாதிரியுடன் கட்டமைக்கப் பட்ட இலக்கியமே. ஆயினும், மொழியைப் பொறுத்தவரை, அது தோன்றக் காரணமாயிருந்தவர்கள் இந்திய முஸ்லீம்களல்லர்; வடநாட்டு உயர்குடியினரான இந்துக்களே.

வ்

பிரிட்டிஷ் ஆட்சியில் எப்படி உயர் பணிகளில் பெரும் பாலும் உயர்குடி இந்துக்களே அமர்த்தப்பட்டனரோ, அது போலவே முகலாயப் பேரரசர் ஆட்சியிலும் உயர்குடி. இந்துக்களே வடநாட்டில் உயர்பணியாளராய் இருந்தனர். முகலாய அரசின் அரசியல் மொழியாயிருந்த பாரசீகத்தை இவ் இந்துக்கள் தமதெனப் பேணிக் கற்று, அதிலேயே பேசவும் எழுதவும் தொடங்கினர். தலைநகரான தில்லியில் பேசப்பட்ட நாட்டுமொழியுடன் பாரசீகச் சொற்களை அவர்கள் (இன்று வடமொழியும் ஆங்கிலமும் கலப்பது போலவே) கலந்து ஜபான்- ஈ-ரெக்தா (சிதறிய சொல் மொழி அதாவது பாரசீகச் சொற்கள் பரவிய மொழி) என்ற கலவை மொழியைத் தோற்றுவித்தனர். இதன் இலக்கிய வடிவமே உருது மொழி.

2. உருதுவும் இந்தியும்

வடஇந்தியாவில் நாற்புறமும் புறக் கோடிகளில் வழங்கிய குஜராத்தி, மராத்தி, வங்காளி, பஞ்சாபி, சிந்தி முதலிய மொழிகள் பெரும்பாலும் எல்லை வரையறையுடையதாய் நிலமொழிகளா யிருந்தன. பின்னாளில் அவை எளிதாக

இலக்கிய