உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உலக இலக்கியங்கள்

255

மொழிகளாகவும் வளர்ச்சியடைந்தன. ஆனால் வடநாட்டின் நடுப்பகுதி முழு வதிலும் ஒழுங்கான நில எல்லையோ, உருவோ, தொடர்ச்சியாக ஒரு பெயரோகூட இல்லாத பல மொழி வகைகள் நிலவின. இவை ஒவ்வொன்று ஒவ்வொரு காலத்தில் இலக்கிய வடிவடைந்ததும் இறந்துபட்டன. இந் நிலையில் இறந்துபட்ட மொழி வகைகள் மேலை நடுநாட்டு மொழிகளாகிய ராஜஸ்தானி, விரஜபாக்கா, கீழை நடுநாட்டு மொழிகளாகிய மைதிலி, பீகாரி முதலியவை ஆகும் இவற்றின் சிதறிய சிற்றிலக்கியங்களையே திரட்டிப் பழைய இந்திய இலக்கியமென இன்றைய இந்திப்புலவர்கள் கொள்கின்றனர்.

ப்

நடுநாட்டில் இலக்கியவடிவம் வளர்ச்சியும் பெற்ற மொழிகள் இந்தியும் உருதுவுமே. இவை இரண்டுக்குமே தெளிவான தாய் நிலப்பரப்புக் கிடையாது. ஏனெனில், இரண்டுக்கும் நிலைக் களனான பகுதி கங்கைச் சமவெளியின் மேற்குப் பகுதியும் (ஐக்கிய மாகாணங்களும்) நடு இந்தியாவும் தாய்நில மொழி தில்லியில் பேசப்பட்ட கலவை நாட்டு மொழியாகிய ஜபான்-ஈ-ரெக்தாவே. இதனுடன் பின்னும் மிகுதியான பாரசீகச் சொற்களும் பாரசீக இலக்கிய மரபுகளும் சேர்த்து உருவாக்கப்பட்ட முஸ்லீம் இலக்கிய மொழியே உருது. நேர்மாறாக இந்து தேசிய இயக்கத்தவர் இதிலுள்ள பாரசீகச் சொற்களைக் கூடியமட்டும் விலக்கி வட மொழிச் சொற்களையும் வடமொழி இலக்கிய மரபுகளையும். கூடியமட்டும் இன்றளவும் புகுந்தி விரிவுபடுத்திவரும் இந்து இலக்கிய மொழியே இன்றைய உயர் இந்தி அல்லது இலக்கிய இந்திமொழி ஆகும்.

3. ரேக்தா, இந்துஸ்தானி, உருது

14ஆம் நூற்றாண்டுக்கு முன் வடஇந்தியாவில் நாட்டு மொழிகள் எதுவும் இலக்கிய வடிவடையவில்லை. இலக்கிய வடிவு பெற்ற மொழிகளும் வட நாட்டில் இறந்துபட்டதனால் அவை நாட்டு மொழித் த ன்மையை இழந்து வந்துள்ளன. அந் நூற்றாண்டில் ல் ராஜஸ்தானியிலும் தில்லி மொழியிலும் விரஜாபாக்காவிலும் நாட்டிலக்கியம் பயிலப்பட்டது. இவற்றுள் தில்லி மொழியில் எழுதியவர் பேர்போன பாரசீக மொழிக் கவிஞரான அமீர் குஸ்ரு. இவர் நாட்டு மொழியில் இயற்றிய பல பாக்கள் ன்று இந்தி, உருது ஆகிய இரு ரு மொழி