உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(260)

அப்பாத்துரையம் 44

பெண்கள் பேச்சு வழக்கை ஒரு மொழியாக்கி அதற்கு ரேக்தாவின் பெண்பால் சொல்லான ரேக்தீ என்ற பெயர் வழங்க வைத்தவர். ‘ஜூர் ஆத்’ தும் இதே வழக்கைப் பின்பற்றியவர். இவர் சிலேடை (இரு பொருள் சொல் வழக்கு) அணியை மிகுதி வழங்கினார். மிஸ்கீனும், மிர் ஆளீஸ், தாபீர் ஆகியவர்களும் பிரிவுப் பாடல்களிலும் ஆதாஷ், நாஸிக் ஆகியவர்கள் உணர்ச்சிப் பாடல்களிலும் வல்ல வர்கள். ஸுருர் எதுகை நயம்பட உரைநடையில் ஒரு காப்பியம் இயற்றினார். வஜீத் அலி ‘அக்தார்’ அவதி என்ற அயோத்திப் பேச்சுநடையில் மூன்று காப்பியங்கள் எழுதியுள்ளார். இது உலக நடை யாதலால் மொழி நூலாராயச்சிக்கும் பெரிதும் பயன்படுவது.

8. பிற்காலத் தில்லி இலக்கியம்

நாதர்ஷா படையெடுப்பின் பின் முகல் பேரரசர் பெயர ளவிலேயே பேரரசராயிருந்தனர். ஆனால், அரசியல் புகழ் குறைந்தாலும் அவர்கள் கலைப்புகழ் ஓங்கி வளரவே செய்தது. இரண்டாம் ஷா ஆலம் (1761-1806) ‘அஃபதாவ்' என்ற கவிதைப் புனைப்பெயருடன் பாநூல்கள் எழுதியதுடன் இலக்கிய இயக்கத்தை மீட்டும் தொடங்கினார். மூவாயிரம் ஆண்டுகட்கு முன் தமிழகத்தில் பண்டைப் பாண்டியர் புலவர்களைக் கூட்டி இலக்கியக்கழகம் அமைத்ததுபோல் அவரும் உருதுக்கவிஞர் மாநாடு ஒன்று நடாத்திக் கழகமமைத்தார். அவருக்கடுத்த முகலரசர் இரண்டாம் பகதூர் ஷாவே கடைசி முகல் அரசர். இவர் பிரிட்டி ஷாரால் அரசிருக்கையிலிருந்து விலக்கப்பட்டு இரங்கூனில் சிறை வைக்கப்பட்டார்; இவ்வரசர் பெருமான் ‘ஸ்பர்' என்ற புனை பெயருடன் தம் துயர வாழ்க்கையைப் பற்றிய கவிதையும் நூலும் இயற்றினார். அவர் நண்பர்களான 'காய'மும் காலி’புமே தில்லியின் இறுதிப்புலவர்கள். இவர்களுக்குப்பின் கவிதை இலக்கியக் காலம் ஓய்ந்துவிட்டது என்னலாம். உருது இலக்கியத்திற்கு அரசர், சிற்றரசர் ஆதரவும் கிட்டத்தட்ட இஃதுடன் முடிவடைந்ததென்றே கூறவேண்டும். ஏனெனில்,19,20 ஆம் நூற்றாண்டுகளில் அவ் வகையில் மீந்துள்ள ஒரே அரசர் ஹைதராபாத் நைஜாமேயாவர்.