உலக இலக்கியங்கள்
9. கல்கத்தாவும் உரைநடை இலக்கியமும் (19 ஆம் நூற்றாண்டு)
261
கிட்டத்தட்ட 1800 ஆம் ஆண்டில் ஐரோப்பியர்களுக்கு இந்தியத் தாய்மொழிப் பயிற்சி தருவதற்காக வில்லியம் கோட்டைக் கல்லூரி திறக்கப்பட்டது. கல்லூரித் தலைவரான டாக்டர் கில்கி ரைஸ்ட் நாட்டு மொழிகளின் இலக்கியப் புலவர்கள் அனை வரையும் திரட்டிக் கல்விப் பயிற்சிக்கான புது நூல்கள் இயற்றுவிக்க ஏற்பாடு செய்தார்.
1800 வரை இந்துஸ்தானியின் கவிதை இலக்கியம் உருது இலக்கியமாக மட்டுமே இருந்தது. உருதுவல்லாத இலக்கியம் அவ்வத் தாய்நில மொழியிலோ அவ்வவ்விடத்து இலக்கிய மொழியிலோ எழுதப்பட்டது. இந் நிலையில் புதிதாக உரைநடை இலக்கியமமைக்குப் புகுபவர் அந்நாளைய உருதுவை வழங்குவதே இயல்பாக நடந்திருக்கக் கூடிய செய்தி. ஆனால், கில்கிரைஸ்ட் உரைநடையில் இந்துக்கள் மனத்தைக் கவரத்தக்க ஓர் இந்து இந்துஸ்தானி அல்லது உயர் இந்தியையும் முஸ்லிம்கள் மனத்தைக் கவர்வதற்காக ஓர் உயர் உருதுவையும் உண்டு பண்ணினார். பழைய உருது அல்லது இந்துஸ்தானியிலுள்ள பாரசீக அராபியச் சொற் களைக் கூடியமட்டும் நீக்கித் தூய பாரசீக அரபியச் சொற்களையும் முன்னிலும் மிகுதியான பாரசீக மரபுகளையும் சேர்த்து உயர் உருது உரைநடை யாக்கப்பட்டது.
கல்கத்தாப் புலவர்களில் லல்லுலால் உயர் இந்தி இலக்கியம் படைத்தவர். லாகூர் நிஹால் சந்த் பெரும்பாலும் உருதுவே எழுதிய முஸ்லீமல்லாதார். இவரே பாரசீகக் காவியமாகிய ‘குல்-ஈ-பகாவ் வீ’யை ‘மஸ்ஹப்-ஈ-இஸ்க்' என்ற பெயருடன் உரைடையிட்ட பாட்டுடைச் செய்யுளாய உருதுவில் எழுதியவர். கல்கத்தா எழுத்தாளருள் உரைநடை ஆற்றலில் சிறந்தவர். 'ஆஃப் ஸோஸ்'. இவர் எழுதிய சிறந்த உரைநடை நூல் ‘ஆரைஷீமஃபில்' என்பது. இது இந்தியாபற்றிப் பாரசீகத்தில் எழுதப்பட்ட ஒரு நூலின் மொழி பெயர்ப்பு. ஹைதரீ ஆரை ஷீமாஃபீல் என்ற பெயரையே கொண்ட புனைகாவியமும் பேர்போன 'தோதாகஹானி'யின் உரைநடைப் பகர்ப்பு ஒன்றும் இவர் இயற்றினார். இவர்களன்றிப் பேராசிரியர் ஹஃபீஸ், மீர் அம்மன், இலா, இக்ராம்' அலீ ஆகியவர்கள் இக் காலப் பெரும் புலவர் ஆவர்.