போதும் முதலாளித்துவம்
11
புரட்சி காரணமாகப் பல அறிவியற் புதுமைகளும் தொழில் நுணுக்க முன்னேற்றங்களும் ஏற்பட்டன. பெரிய தொழிற் சாலைகள் எழுந்து குறைந்த செலவில் ஏராளமான பொருள்களை உற்பத்தி செய்து தள்ளின. இயல்பாகவே சிறு உற்பத்தியாளர்களின் பொருள் உற்பத்திக்கான செலவு தொழிற்சாலையின் உற்பத்திச் செலவைவிட எவ்வளவோ மிகுதியாயிருந்தது. இப்படியே சிறு உற்பத்தியாளர் வகுப்புக்குச் சாவு மணியடிக்கபடலாயிற்று. வர்த்தகக் களத்திலிருந்து தனிப்பட்ட உற்பத்தியாளர்கள் துரத்தியடிக்கப்பட்டுத் தொழிலாளிகளாக மாற்றமடைந்தனர். இங்ஙனமாக சமூகம் முதலாளி தொழிலாளி என்ற இரு வகுப்புகளாகப் பிரிந்தது.
மில், ரிக்கார்டோ போன்ற பழம்பற்றாளர் சார்பான பொருளியலறிஞர் முதலாளித்துவம் கடவுளாலேயே அமைக்கப்பட்டதென்று நம்பினர். அவர்கள் செய்த பொருளியல் ஆராய்ச்சியெல்லாம் அம்முதலாளித்துவத்தில் தற்காலிகமாகக் காணப்பட்ட பண்புகளைப் பற்றியதே. ஆனால் இன்றிக்கும் வடிவில் முதலாளித்துவ முறை மிக்க அண்மைக் காலத்தில் ஏற்பட்டதுதான். நில ஆதிக்க முறை சிதைந்த பின்னரே அது தோன்றியது.
வரலாற்று முறைப்படி பார்த்தால் இதற்கு முன்னிருந்த பழைய முதலாளித்துவம் உண்மையில் முதலாளித்துவ முறையின் குழந்தைப் பருவம் மட்டுமே. 18-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை அது வாலிபப் பருவத்தையோ அல்லது முழுக் குழந்தைப் பருவத்தையோகூட அடைந்துவிட்டதாகக் கூற முடியாது என்பதைச் சமதர்மவாதிகள் வற்புறுத்தியுள்ளனர், வற்புறுத்து கின்றனர். அதன்பின் இது இவ்வளவு மிகக் குறைந்த காலத்திற்குள் வளர்ச்சி பெற்றுவிட்டது. இவ்வளர்ச்சிக்கான காரணங்கள்: புதிய வகை இயந்திரங்கள் மிக வேகமாகக் கண்டுபிடிக்கப்பட்டன; அதேசமயம் அவ்வியந்திரங்களை ஓட்டுவதற்குப் புதிய நீராவி அற்றல் கண்டுபிடிக்கப்பட்டது;
வற்றுடன் பொதுவாக, உற்பத்தி முறைகள் முன்னேற்ற மடைந்தன.இவற்றைச் சமதர்மிகள் வற்புறுத்திக் காட்டுகிறார்கள். இவற்றின் பயனாகச் சிறு அளவான பழைய உற்பத்தி மிகப் பெரிய அளவான புதிய உற்பத்தியாக மாறிற்று.