உலக இலக்கியங்கள்
263
இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கம் வரை வாழ்ந்த இன் னொரு கவிஞர் மீர்ஜாகான் தாக் ஆவர். இவர் இனிமையும் நளினமும் உடைய பாவியல் நடையுடையவர்.
11. முடிவுரை
உருது, உரைநடை
உரைநடைமொழியில் கவிதை இரண்டினுக் கிடையேயும் வேற்றுமை மிகுதி இல்லை. இவ்வகையில் இந்தி உருதுவுடனும் மற்றெம் மொழியுடனும் மாறுபட்டுவிட்டது. உரைநடை வடமொழி கலந்த இந்துஸ்தானியிலும் கவிதை அவ் வுரைநடை இந்தியில் ஒருபாலும் பழைய பல்வேறுபட்ட இலக்கிய மொழிகளில் ஒருபாலுமாகச் சிதறி இயல்கின்றது. ஆயினும், பேச்சுநடை இலக்கியநடை ஆகியவை இரண்டும் இருவேறு பட்டுள்ள தன்மையில் உருதுவும் இந்தியும் ஒரு நிலைமை உடையதாகவே இருக்கின்றன.
தென்னிந்திய மொழிகளை நீக்கிப் பார்த்தால் இந்தியாவில் கவிதை, உரைநடை ஆகிய ரண்டிலும் ஒன்றுபோல் நிறைவுடைய இலக்கிய மொழி உருது ஒன்றே வங்காளியும் இந்தியும் அதனை அடுத்த பெருமையே உடையவை. ஆயினும், அண்மை வரையில் இவ்விலக்கியத்தில் ஒரு பெருங்குறைபாடு இருந்துவந்தது. எழுத்தாளர்கள் பாரசீகச் சொல், பாரசீக மரபு, பாரசீக உவமைகள், பாரசீக நாட்டுக் காட்சி ஆகியவற்றிலேயே திளைத்து இந்திய மொழியில் வெளிநாட்டிலக்கியம் பேணினர். கண்முன் கண்ட இந்தி வாழ்வில் கவனம் செலுத்தவில்லை. ஆங்கிலக் கல்வி காரணமாக 'ஹாலி' 'இக்பால்' ஆகிய கவிஞர்கள் இச் செயற்கை முகமூடி அகற்றி விடுதலை ஒளி வீசினர்.
வருங்காலத்தில் உருது இந்தியாவின் பல்நிற நாகரிகத்தில் ஒரு தலிைமணியாய் இந்தியாவையும் இஸ்லாமையும் இணைத்து நிற்க உதவும் பெருமை உடையது. இஸ்லாமிய உலகுக்கு இந்தியாவையும் இந்தியாவுக்கு இஸ்லாமின் நாகரிகத்தையும் விளக்கும் இணையற்ற கலைக்கருவியாய் அது அமையும் என்று உறுதியாக நம்பலாம்.