உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




7. பாரசீக இலக்கியம்

1. வையகத் துறக்கம்

ஷாஜகான் தான் கட்டிய பள்ளி ஒன்றன்மீது பூவுலகில் துறக்கமுண் டெனில், அது இதுவே என்று வரைந்தனராம். இலக்கிய நல்லன்பர் பாரசீக இலக்கியத்தின் மீதும் இலக்கிய உலகில் ஒரு துறக்கம் உண்டெனில் அவ்வையகத் துறக்கம் இதுவே என வரைய லாகும்.

உலக இலக்கியத்தை ஒரு இலக்கியக்காடு என்று கூறினால், பாரசீக இலக்கியத்தை அதனிடையே அமைந்த இலக்கியப் பூங்காவனம் என்று கூறலாம்.

உலகில் கவிஞர்களுக்கும் கவிதை வெறியூட்டத்தக்க கற்பனைக் களஞ்சியம் பாரசீகக் கவிதை, தண்ணிலவும் தென்றலும் நறுமலர் மணமும் தீந்தேறலும் மிக்கதாய்க் கவிதைமங்கையுடன் யாழிசை துய்க்கும் இன்பத்தை நினைவூட்டாத பாடல் பாரசீக மொழியில் இல்லை என்னலாம் இவ்வகையில் உமர் கையாமின் பாடல்கள் உலகெங்கும் புகழ் பரந்துள்ளன.

புனைகதைகளுக்கும் பாரசீக இலக்கியம் ஒப்பற்ற களஞ்சியம். புனைகதையுலகிற்குப் புத்தர்கால இந்தியாவே தலை யூற்றாகக் கொள்ளப் படுகிறது. ஆயினும், காட்டுமலர்கள் போல் சிந்திக்கிடக்கும் இந்தியப் புனை கதைச் செல்வத்தை இன்பப் பூஞ்செண்டுகளாகவும், நறுமலர் மாலைகளாகவும் தொடுத்து உலகுக்கு அளித்த பெருமை பாரசீகத்தினுடையதே.பொதுவாகப் பாரசீக நாட்டிலேயே தோன்றிய புனைகதைகளும் பல.

உரைநடை இலக்கியத்திலும் பாரசீக இலக்கியம் சீன மொழியை ஒத்த இலக்கியப் பழமையுடையது. அறிவுக் களஞ்சியம்' மருத்துவம், வானநூல், கணக்கியல் ஆகிய அறிவுத் துறைகளிலும் பாரசீகம் வெற்றி கண்டது. இவை தவிர 8 ஆம்