உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 44.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




266

அப்பாத்துரையம் - 44

(சோமபான) ஆரியருக்கு ஏற்பட்ட பிளவுக்கு அவர் சீர்திருத்தமே காரணம் என்று சில அறிஞர் கூறுகின்றனர். இது உண்மை யானால் அவர் காலம் கி.மு.1500க்கம் முற்பட்டதாதல் வேண்டும். எப்படியும் சமயங்கண்ட உலகப் பெரியார்களில் காலத்தால் முற்பட்ட முதல் பெரியார் இவரே என்பதில் ஐயமில்லை.

3. பாரசீக வரலாறு

பாரசீகர் கி.மு. 900 முதல் கி.மு. 400 வரை பேரரசாண்டனர். அப்பேரரசு எகிப்து முதல் சிந்து ஆறுவரை பரவியிருந்தது. கி.மு. நான்காம் நூற்றாண்டில் அலெக்ஸாண்டர் படையெடுப்பால் இப் பேரரசும் அழிவுற்றது. அதனுடன் பாரசீக இலக்கிய வாழ்வும் 500 ஆண்டுகள் செயலற்றுப் போயிற்று. கி.மு.200 இல்ஸாஸானிய ஆட்சி முதல் ஜர துஷ்ட்ர சமயமும் இலக்கியமும் மீண்டும் தலையெடுத்தன. அவெஸ்தாவின் உரைகளாகிய 'ஐந்து' இக் காலத்தில் எழுதப்பட்டதனால் இக்காலப் பாரசீக மொழி 'ஐந்து' மொழி எனப்படுகிறது.

கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் அரேபியாவிலிருந்து இஸ்லாம் சமயமும் ஆட்சியும் எகிப்து முதல் இந்தியா வரை பரந்தது. ஒரு வகிையல் வாளும் ஒரு கையில் குர் ஆனும் கொண்டு படையெடுத்த அராபிய முஸ்லிம்கள் முன், தமிழர்போலக் கலைப்பண்பாடும் விட்டுக்கொடுக்கும் இயல்பும் உடைய பாரசீகர் தம் சமயம், பண்பாடு ஆகியவற்றைக் காத்துக்கொள்ள முடியவில்லை. ஒரு சிலர் தாய்நாடு விட்டும் அவற்றைக் காக்கத் துணிந்து இந்தியாவிற்கு ஓடிவந்தனர். அவர்களே இன்றைய பார்ஸிகள்.

ஒரு நூற்றாண்டுக் காலம் அராபிய மொழி ஆதிக்கம் பாரசீக இலக்கிய வாழ்வை மீண்டும் ஒருமுறை செயலற்ற தாக்கிற்று. ஆனால், பாரசீகர் பண்டைப் பண்பாடு முற்றிலும் வீண்போக வில்லை. புதிய அரசியல் மொழியாகிய அரபை மேற்கொண்ட பாரசீக அறிஞர் விரைவில் அரவி இலக்கியத்தையும் இஸ்லாம் சமயத்தையும் தமதாக்கித் தலைமை நிலை கொண்டனர். இலக்கியத்திலோ அரபு மொழிச் செய்யுள் வகைகளில் தொடங்கிக் கவிதை விரைவில் தலை தூக்கிற்று. நாளடைவில் இலக்கியத் துறையில் பழைய சமய அறிவுத் துறைக்