268
அப்பாத்துரையம் - 44
போன மருத்துவ, மெய்விளக்க அறிஞர் அபகவி இபன் சீனா ; அக் கால இந்தியாவின் வரலாறு எழுதிய அல்பீருனி, குர் ஆன் பேருரையாளர் அல்பைஜானி ஆகியவர்கள் எழுதிய மொழி அரபாயினும் பாரசீக நாட்டினரேயாதலால் பாரசீக இலக்கிய வரலாற்றிலும் குறிக்கப்பட வேண்டியவராவர்.
5. கஜினி முகம்மது காலம் வரை
தற்காலம் பாரசீகமொழியில் முதன் முதல் கவிதை எழுதிய வர்கள் 9 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த ஹன்ஸாலாவும் மாமுதியும் ஆவர். ஜரதுஷ்ட்ரர் பிறந்த நகராகக் கூறப்படும் பல்க் நகரில் பிறந்த அபிஷுக்கர் பாரசீக மொழியில் புகழ்பெற்ற பாவினமாகிய நாலடிப்பா வண்ணத்தை (ரூபாஇயத்) முதலில் வழங்கியவர் ஆவர். இதன் முதலிரண்டடியும் ஈற்றடியும் ஒரே கடை எதுகையிலும் மூன்றாம்படி எதுகையின்றியும் நடைபெறும் பாரசீகத்தின் முதற்பெரு நாட்டுக் கவிஞனாகிய 'ருதகி' இக் காலத்தவரே. அரபி இஸ்லாமின் கடப்பாடுகளை உதறிவிட்டுப் பழைய பாரசீக (ஈரானிய)க் கதைகளுக்குப் புத்துயிர் தந்தவர் இவரே. கவிதை உலகில் ‘மது மாதர் கவின் கவிதை’ யாகிய மூன்றுக்கும் முதலிடமளித்தவரும் இவரே. இவர் எழுதிய வரலாற்றுச் சார்பான புனைகதைகள் கிட்டவில்லை யாயினும், அதன் பகுதி களும் வேறுபல எழுச்சிப்பாடல்களும்4 எஞ்சியுள்ளன. பிற்காலக் கிளிப்பிள்ளைத் தொடர்களும் எடுப்பான புனைவுரைகளும் இல்லாத இவர் தூயநடை வடமொழிக் காளிதாசனையும் தமிழ்ச் சங்ககாலக் கவிதையையும் நினைவூட்டவல்லது. தகீகி என்பவர் ருதகியினும் முனைப்பான நாட்டெழுச்சியாளர். அவர் “மாதர் கொவ்வை இதழ், இசை, செந்நிறமது" ஆகிய மூன்றுடன் ஒப்பாக “ஜரதுஷ்டிரர் கோட்பாடுகளையும்” சேர்த்து இலக்கிய உலகில் நான்மணிகள் என்று குறிப்பிட்டார். இவர் 1000 பாடல்களாக எழுதிய நாட்டு வரலாறே பிற்காலத்தில் பிர்தாஸியின் பேர்போன ஷாநமாவின் முதல் நூலாகும்.
முகமது கஜினியின் காலமே பாரசீக இலக்கியத்தின் பொற் காலம் ஆகும். ஆங்கிலப் பழங்கதை அரசன் ஆர்தர் தம்கால வீரப் பெருந்தகையார்களைத் தம் வட்ட மேடையைச் கற்றி திரட்டி னதாகக் கூறப்படுவதுபோல இவர் தங்காலப் புலவர்களை